ஆசிரியர்களுக்குத் துப்பாக்கி: அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் மசோதா நிறைவேற்றம்

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் ஆசிரியர்களுக்கு துப்பாக்கி வைத்திருக்க அனுமதி அளிக்கவும், துப்பாக்கிகளை வாங்குவதற்கான குறைந்தபட்ச வயதை 21-ஆக உயர்த்தியும் அந்த மாகாண
ஆசிரியர்களுக்குத் துப்பாக்கி: அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் மசோதா நிறைவேற்றம்

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் ஆசிரியர்களுக்கு துப்பாக்கி வைத்திருக்க அனுமதி அளிக்கவும், துப்பாக்கிகளை வாங்குவதற்கான குறைந்தபட்ச வயதை 21-ஆக உயர்த்தியும் அந்த மாகாண நாடாளுமன்றம் புதிய சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
'மெஜாரிடி ஸ்டோன்மென் டக்ளஸ் பள்ளி பொதுப் பாதுகாப்புச் சட்டம்' என்று பெயரிடப்பட்டுள்ள அந்த மசோதா, தற்போது மாகாண ஆளுநர் ரிக் ஸ்காட்டின் ஒப்புதலுக்காக அனுப்பப்படவிருக்கிறது.
குடியரசுக் கட்சியைச் சார்ந்தவரான ரிக் ஸ்காட், இந்த மசோதாவை தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்வாரா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. 
எனினும், ஏற்கெனவே துப்பாக்கி வாங்குவதற்கான கட்டுப்பாடுகளை அதிகரிக்கலாம் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்த கருத்துக்கு ஆளுநர் ரிக் ஸ்காட் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 
ஃபுளோரிடா மாகாணம், பார்க்லாண்ட் நகரிலுள்ள மெஜாரிட்டி ஸ்டோன்மேன் பள்ளியில் நிக்கோலஸ் ஜேக்கப் குரூஸ் என்ற முன்னாள் மாணவர் கடந்த 14-ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினார்.
இந்தத் தாக்குதலில் 14 மாணவர்களும், 3 ஆசிரியர்களும் பலியாகினர். இந்த நிலையில், பள்ளிகளில் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, துப்பாக்கி வைத்திருப்பதற்கான குறைந்தபட்ச வயதை 18-லிருந்து 21-ஆக அதிகரிப்பதற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவு தெரிவித்திருந்தார்.
மேலும், மாணவர்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், ஆசிரியர்கள் வகுப்பில் துப்பாக்கி வைத்திருப்பதற்கான அனுமதியை வழங்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில், இந்த இரு அம்சங்களையும் கொண்ட சட்ட மசோதாவை ஃபுளோரிடா நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com