எல்லை விவகாரத்தில் போருக்குத் தயார்: சீன அதிபர் அறிவிப்பு

எல்லைப் பகுதிகளில் சிறிய இடத்தைக் கூட விட்டுக்கொடுக்க முடியாது. இதில் போருக்கும் தயாராக இருப்பதாக சீன அதிபர் ஜீ ஜின் பிங் செவ்வாய்கிழமைதெரிவித்துள்ளார்.
எல்லை விவகாரத்தில் போருக்குத் தயார்: சீன அதிபர் அறிவிப்பு

சீன நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் காங்கிரஸின் ஆண்டு விழா கூட்டமைப்பு நடைபெற்றது. அதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீன அதிபர், எல்லை விவகாரத்தில் சீனா போருக்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சீன அதிபர் ஜீ ஜின் பிங் கூறியதாவது:

எல்லை விவகாரத்தில் எவ்வித உடன்பாட்டிற்கும் சீனா தயாராக இல்லை. எங்களது மண்ணில் ஒரு துளியை ஆக்கிரமிக்க நினைத்தாலும் எங்கள் எதிரி நாட்டுடன் போர் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். எந்த விதத்திலும் எங்கள் எல்லைப்பகுதிகளை நாங்கள் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. எந்த ஆக்கிரமிப்புகளுக்கும் இடமில்லை. இது எங்கள் தன்மானப் பிரச்னை.

இதர நாடுகளின் எல்லையை ஆக்கிரமிப்பதில் சீனாவுக்கு விருப்பமில்லை. மாறாக எங்களுடைய இடம் ஆக்கிரமிக்கப்படுவதிலும் உடன்பாடு இல்லை. எனவே அதுபோன்று செயல்களைச் செய்யும் எதிரி நாட்டுடன் உடனடியாக போரில் ஈடுபட தயாராக இருக்கிறோம் என்றார்.

முன்னதாக, பிரிட்டீஷ் ஆதிக்கத்தில் இருந்த ஹாங்-காங், தற்போது தன்னாட்சி முறையில் செயல்பட்டு வருகிறது. அதுபோல தைவான் தீவுகளும் சுயாட்சி முறையில் இயங்கி வருகிறது. ஆனால் இந்த நிலப்பரப்பு அனைத்தும் தங்களுக்குச் சொந்தமானது என்று சீனா கூறி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com