வட மற்றும் தென் கொரிய நாடுகளுக்கு இடையில் நாளை பேச்சுவார்த்தை

சியோல்: தென் கொரிய மற்றும் வட கொரிய நாடுகள் நாளை(மே 16) உயர்மட்ட கூட்டத்தை நடத்தவுள்ளதாக தென் கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வட மற்றும் தென் கொரிய நாடுகளுக்கு இடையில் நாளை பேச்சுவார்த்தை

கொரிய தீபகற்பத்தின் ஒற்றுமை, அமைதி மற்றும் வளத்திற்கான பன்முன்ஜோம் பிரகடனம் குறித்து ஆலோசிக்க நாளை (மே 16) உயர்மட்ட கூட்டத்தை நடத்த உள்ளதாக தென் கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சர் கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 

கடந்த மாதம் ஏற்பட்ட இரு கொரிய நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட சமாதானத்தை அடுத்து இந்த கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பன்முன்ஜோம் பிரகடனம் குறித்தான ஒப்பந்தங்கள் மற்றும் அதனை அமல்படுத்தும் திட்டம் குறித்து இரண்டு நாடுகளும் ஆலோசிக்க உள்ளன. 

இந்த உயர்மட்ட கூட்டத்துக்கு வட கொரிய சார்பில் 30 பேர் கொண்ட குழு பங்கேற்க இருக்கிறது. இந்த குழுவுக்கு நாட்டில் அமைதி மற்றும் ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கான குழுவின் தலைவர் ரி சோன்-ங்க்வோன் தலைமை வகிக்க உள்ளார். 

தென் கொரிய சார்பில் ஒருங்கிணைப்பு அமைச்சர் சோ ம்யங்-ங்க்யோன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு பங்கேற்கிறது. இந்த கூட்டம் இரு நாடுகளை ஒருங்கிணைக்கும் பன்முன்ஜோம் கிராம எல்லையில் நடக்கிறது. 

முன்னதாக வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பான வட மற்றும் தென் கொரிய அதிபர்கள் இருநாடுகளின் எல்லையில் சந்தித்துப் பேசினர். 

பின்னர், வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் 12-ஆம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேச இருப்பதாக அறிவிப்பு வெளியானது. 

இதையடுத்து, அணு ஆயுத சோதனை கூடங்களை முற்றிலும் அழிப்பதாக வட கொரிய நாடு தெரிவித்தது. அதற்கான தொழில்நுட்ப பணிகள் இந்த மாத இறுதியில் தொடங்கி செப்டம்பர் மாதத்துக்குள் சீல் வைக்கப்படும் என்று அந்நாடு தெரிவித்தது. இந்த செய்தியை டிரம்ப், கிம் ஜோங் உன்னை சந்திப்பதாக வெளியிட்ட அறிவிப்புக்கு பிறகு கூறியதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. 

இந்நிலையில் தான் வட மற்றும் தென் கொரிய நாடுகள் உயர்மட்ட கூட்டத்தை நாளை நடத்துகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com