சர்ச்சைக்குரிய தீவில் சீன போர் விமானம் தரையிறக்கம்

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியிலுள்ள தீவில், தனது குண்டு வீச்சு விமானத்தை சீனா முதல் முறையாக தரையிறக்கியுள்ளது.
சர்ச்சைக்குரிய தீவில் சீன போர் விமானம் தரையிறக்கம்

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியிலுள்ள தீவில், தனது குண்டு வீச்சு விமானத்தை சீனா முதல் முறையாக தரையிறக்கியுள்ளது.
தெற்கு மற்றும் கிழக்கு சீனக் கடலில், சர்ச்சைக்குரிய பல்வேறு பகுதிகளுக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. குறிப்பாக, தென் சீனக் கடலில் ஏறத்தாழ அனைத்து பகுதிகளும் சீனாவுக்குத்தான் சொந்தம் என்று அந்த நாடு கூறி வருகிறது.
இதன் காரணமாக, அந்தப் பகுதிகளில் சொந்தம் கொண்டாடி வரும் வியத்நாம், பிலிப்பின்ஸ், மலேசியா, புரூணே, தைவான் ஆகிய அண்டை நாடுகளுக்கும், சீனாவுக்கும் இடையே பிரச்னை நீடித்து வருகிறது.
இந்தச் சூழலில், தென் சீனக் கடல் பகுதியில் சீனா அமைந்துள்ள 3 தொலைதூர மையங்களில் கப்பல்களை அழிக்க வல்ல குரூஸ் ரக ஏவுகணைகள், தரையிலிருந்து தரை இலக்குகளைத் தாக்கக் கூடிய ஏவுகணை ரகங்கள் மற்றும் அவற்றை ஏவுவதற்கான தளவாடங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்தச் சூழலில், தனது குண்டு வீச்சு விமானத்தையும் சீனா அந்தப் பகுதியில் தரையிறக்கியதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com