தெற்கு சூடான்: 210 சிறுவர் படையினர் விடுவிப்பு

தெற்கு சூடானில் ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்பட்டு, சண்டையில் ஈடுபடுத்தப்பட்டு வந்த 200-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் விடுவிக்கப்பட்டதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

தெற்கு சூடானில் ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்பட்டு, சண்டையில் ஈடுபடுத்தப்பட்டு வந்த 200-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் விடுவிக்கப்பட்டதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
தெற்கு சூடானில் அரசுப் படையினருக்கும், எதிக்கட்சிகளின் படையினருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுச் சண்டை நடைபெற்று வருகிறது.
இந்தச் சண்டையில், தங்களுடன் இணைந்து போரிடுவதற்காக 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களை இரு தரப்பு ஆயுதக் குழுவினரும் வலுக்கட்டாயமாகச் சேர்த்து வருவது சர்வதேச அளவில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஐ.நா. மேற்கொண்டு வந்த தொடர் முயற்சி காரணமாக அரசுக்கு எதிராகப் போரிடும் ஆயுதக் குழு 3 சிறுமிகள் உள்பட 210 சிறுவர்களை விடுவித்ததாகவும், அவர்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் ஐ.நா. துணை செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் தெரிவித்தார்.
ஐ.நா. முயற்சியால் இதுவரை சுமார் 1,000 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com