வெனிசூலா தேர்தல்: மடுரோ மீண்டும் அதிபராகும் வாய்ப்பு

வெனிசூலாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் நிக்கோலஸ் மடுரோ மீண்டும் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெனிசூலாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் நிக்கோலஸ் மடுரோ மீண்டும் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மைக் காலமாக வெனிசூலாவில் ஏற்பட்டு வரும் பொருளாதாரப் பின்னடைவுக்கு அதிபர் மடுரோவின் நடவடிக்கைகள்தான் காரணம் என்று கூறி வரும் அந்த நாட்டு எதிர்கட்சிகள், அவரை பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தன. இந்த நிலையில், இந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் நடத்த வேண்டிய அதிபர் தேர்தலை முன்கூட்டி மே மாதமே நடத்த அவர் முடிவு செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்தன.
இந்த நிலையில், அதிபர் தேர்தல் திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் மடுரோ உள்ளிட்ட பல தலைவர்கள் வாக்களித்தனர்.
பொருளாதாரப் பின்னடைவு காரணமாக அதிபர் மடுரோவின் செல்வாக்கு வெகுவாகச் சரிந்ததாகக் கூறப்படுகிறது.
எனினும், எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்ததால் அவருக்கு இந்தத் தேர்தலில் மிகப் பெரிய போட்டி இல்லை என்ற நிலையில் அவர் எளிதாக வெற்றி பெற்று, மீண்டும் அதிபர் பதவியை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com