நிலவின் இருண்ட பகுதியில் ஆய்வு: செயற்கைக்கோள் அனுப்பியது சீனா

நிலவின் இருண்ட பகுதிகளைக் குறித்து ஆய்வு செய்வதற்கான புதிய செயற்கைக்கோளை சீனா திங்கள்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
நிலவின் இருண்ட பகுதியில் ஆய்வு: செயற்கைக்கோள் அனுப்பியது சீனா

நிலவின் இருண்ட பகுதிகளைக் குறித்து ஆய்வு செய்வதற்கான புதிய செயற்கைக்கோளை சீனா திங்கள்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
"நிலவின் இருண்ட பகுதிகள்' என்று கூறப்படும், இதுவரை ஆய்வுகள் மூலம் அதிக உண்மைகள் அறியப்படாத மர்மம் நிறைந்த பகுதிகளில் முதல் முறையாக ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்று சீனா திட்டமிட்டிருந்தது.
அந்தத் திட்டத்தை நிறைவேற்றும் வகையில், அந்த நாடு வடிவமைத்த குயீகியாவ் செயற்கைக்கோள், திங்கள்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
400 கிலோ எடை கொண்ட அந்த செயற்கைக்கோள், நிலவை 3 ஆண்டுகளாக சுற்றி வந்து ஆய்வுகள் மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சீனாவின் லாங் மார்ச்-4சி ராக்கெட் மூலம் அந்த ஆய்வுக் கலம் ஷிசாங் ஏவுதளத்திலிருந்து உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.28 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டதாக (படம்) சீன தேசிய விண்வெளி ஆய்வு அமைப்பு தெரிவித்தது.
ராக்கெட் விண்ணில் பாய்ந்த 25 நிமிடங்களுக்குப் பிறகு, தனியாகப் பிரிக்கப்பட்ட செயற்கைக்கோள், நிலவை நோக்கியப் பயணத்துக்கேற்ற சுற்றுவட்டப் பாதையை அடைந்தது.
மேலும், மடக்கி வைக்கப்பட்டிருந்த அதனது ஆன்டனாக்கள் விரிக்கப்பட்டன.
பூமிக்கும், நிலவுக்கும் இடையிலான சுற்றுவட்டப் பாதையில், பூமிக்கு 4,55,000 கி.மீ. தொலைவில் உள்ள இரண்டாவது சுழி ஈர்ப்புப் புள்ளியை இந்த செயற்கோள் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அது நிறைவேறினால், அந்தப் புள்ளியை அடைந்த முதல் தகவல் தொடர்பு செயற்கைக்கோளாக குயீகியாவ் திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com