கியூபா விமான விபத்து: பலி எண்ணிக்கை 111-ஆக உயர்வு

கியூபாவில் கடந்த வெள்ளிக்கிழமை விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானத்திலிருந்து படுகாயத்துடன் மீட்கப்பட்ட 3 பெண்களில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
விமான விபத்தில் மீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் ஹவானா மருத்துவமனை.
விமான விபத்தில் மீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் ஹவானா மருத்துவமனை.

கியூபாவில் கடந்த வெள்ளிக்கிழமை விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானத்திலிருந்து படுகாயத்துடன் மீட்கப்பட்ட 3 பெண்களில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதையடுத்து, அந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 111-ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து கியூபா சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வெள்ளிக்கிழமை நேரிட்ட விமான விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிரெடெல் லாண்ட்ரோவ் (23), சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த விபத்தில் மீட்கப்பட்ட மற்ற இரு பெண்களின் உடல் நிலையும், தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கியூபா தலைநகர் ஹவானா விமான நிலையத்திலிருந்து ஹோல்கைன் நகருக்கு அந்த நாட்டு அரசுக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் 107 பயணிகள், 6 விமானப் பணியாளர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றது. 
விமானம் உயரே எழும்பிய சில நிமிடங்களில், விமான நிலையத்துக்கு அருகே உள்ள பகுதியில் விழுந்து நொறுங்கியது. 
இந்த விபத்தில் 110 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த நிலையில் 3 பெண்கள் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்ததாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com