பிரிட்டன் ஆவணக் காப்பகம்: இந்திய - இலங்கை உறவு பற்றிய தகவல்கள் அழிப்பு

இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரமாக இயங்கியபோது அந்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் இடையே இருந்த ராஜீயரீதியிலான உறவுகள் தொடர்பான ஆவணங்களை

இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரமாக இயங்கியபோது அந்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் இடையே இருந்த ராஜீயரீதியிலான உறவுகள் தொடர்பான ஆவணங்களை பிரிட்டன் அரசு அழித்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 கடந்த 1978-இலிருந்து 80 வரையிலான காலகட்டத்தில் இரு நாடுகளும் எத்தகைய நிலைப்பாடுகளுடன் செயல்பட்டன? என்பது குறித்த ஆவணங்கள் அந்நாட்டு காப்பகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த காலகட்டத்தில்தான் இரு தரப்புக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.
 அந்தத் தருணத்தில் பிரிட்டனின் உளவு விமானப் படையும், உளவுத் துறையும் இலங்கைக்கு ஆதரவாகச் செயல்பட்டன. குறிப்பாக, இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு பல்வேறு பயிற்சிகளை பிரிட்டன் அளித்தது. ஒருபுறம் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா கொண்டிருந்த வேளையும், அதற்கு நேர்மாறான நிலைப்பாட்டை அப்போது பிரிட்டன் எடுத்ததாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 இதுதொடர்பான ஆவணங்கள், முக்கியப் பதிவுகள் ஆகியவை பிரிட்டனின் ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், பத்திரிகையாளரும், ஆராய்ச்சியாளருமான பில் மில்லர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அதுதொடர்பான விவரங்களைக் கேட்டிருந்தார். அப்போதுதான், அந்த ஆவணங்கள் அனைத்தும் மாயமாகியிருப்பது தெரியவந்தது.
 இதுதொடர்பாக விளக்கமளித்த பிரிட்டன் வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகம், தேவைக்கு அதிகமாக உள்ள சில ஆவணங்களை அழிப்பது என்பது அரசின் கொள்கை சார்ந்த முடிவு என்று தெரிவித்துள்ளது. அதன்படி 195 ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. அவற்றில் இந்தியா - இலங்கை இடையேயான தொடர்புகள் குறித்த இரு ஆவணங்களும் அடக்கம்.
 பிரிட்டனின் இந்த செயலுக்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ள தமிழ் அமைப்புகள், இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை எனக் கூறியுள்ளன. இதுகுறித்து தமிழ் தகவல் மையத்தின் நிறுவனர் வைரமுத்து வரதகுமார் கூறியதாவது:
 கடந்த 1979 மற்றும் 80-களில் இலங்கை ராணுவத்துக்கு பிரிட்டன் போர் ஆலோசனைகளையும், பயிற்சிகளையும் வழங்கியது. அந்த உண்மைகளை வரலாற்றில் இருந்து இருட்டடிப்பு செய்ய வேண்டும் என்பதற்காகவே, ஆவணங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன என்றார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com