மோடியை அடுத்த வாரம் சந்திக்கிறார் அமெரிக்க துணை அதிபர் பென்ஸ்

சிங்கப்பூர் உள்ளிட்ட 4 நாடுகளுக்கு அடுத்த வாரம் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் உள்ளிட்ட 4 நாடுகளுக்கு அடுத்த வாரம் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
 சிங்கப்பூரில் யு.எஸ். - ஆசியான் உச்சி மாநாடு, கிழக்கு ஆசிய நாடுகள் மாநாடு ஆகியவை அடுத்த வாரம் நடைபெறவுள்ளன. அதைத் தொடர்ந்து, பப்புவா நியூ கீனியாவில் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாடுகளில் கலந்து கொள்வதற்காக, அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், வரும் 11-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை சிங்கப்பூர், பப்புவா நியூ கீனியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
 இந்தப் பயணத்தின்போது, சிங்கப்பூரில் அந்நாட்டு பிரதமர் லீ சியென் லூங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, பப்புவா நியூ கீனியா பிரதமர் பீட்டர் ஓ நீல், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் ஆகியோரை மைக் பென்ஸ் தனித்தனியே சந்தித்துப் பேசவுள்ளார்.
 வழக்கமாக, வெளிநாடுகளில் நடைபெறும் உச்சி மாநாடுகளில் அமெரிக்க அதிபர் பங்கேற்பது வழக்கம். இந்த முறை, அதிபர் டிரம்ப் கேட்டுக் கொண்டதன் பேரில், சிங்கப்பூர், பப்புவா நியூ கீனியாவில் நடைபெறும் உச்சி மாநாடுகளில், அதிபரின் சார்பில் மைக் பென்ஸ் பங்கேற்கவுள்ளார். அவருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனும் மாநாடுகளில் பங்கேற்கவுள்ளார். இந்த மாநாடுகளில் இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் பொருளாதார ஒத்துழைப்பு, பாதுகாப்பு ஆகிய விவகாரங்களில் அமெரிக்கா அளித்து வரும் ஒத்துழைப்பு குறித்து மைக் பென்ஸ் விரிவாக எடுத்துரைக்கவுள்ளார் என்று அவரது ஊடகச் செயலர் அலிஸா ஃபாரா வெள்ளிக்கிழமை கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com