ஈராக், காங்கோ நாடுகளைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு 

ஈராக், காங்கோ நாடுகளைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் டெனிஸ் முக்வேஜா, நாடியா முராத் ஆகியோருக்கு 2018ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈராக், காங்கோ நாடுகளைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு 


நார்வே: ஈராக், காங்கோ நாடுகளைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் டெனிஸ் முக்வேஜா, நாடியா முராத் ஆகியோருக்கு 2018ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

நார்வே தலைநகர் ஆஸ்லேவில் இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

பாலியல் வன்கொடுமையை போரின் ஒரு பகுதியாகப்  பயன்படுத்துவதற்கு எதிராகப் போராடியதற்காக இவர்கள் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2018ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசைப் பெறும் காங்கோ நாட்டைச் சேர்ந்த டெனிஸ் முக்வேஜா ஒரு மருத்துவராவார். போரின் போது பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளான பெண்களுக்கு இவர் சிகிச்சை அளித்து வருகிறார்.

ஈராக்சைச் சேர்ந்த குர்து மனித உரிமை அமைப்பின் மூலம் சிறுபான்மையினரான யாசிதி பெண்களுக்காக உலகம் முழுவதும் விழிப்புணவை ஏற்படுத்தி வரும் பெண் நாடியா முராத். 

நாடியா முராத்தும், டெனிஸ் முக்வேஜாவும், 2018ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பகிர்ந்து கொள்கிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com