நவம்பர் 7-ம் தேதி சீனாவில் சர்வதேச இணைய மாநாடு

சீனாவின் வூஜென் நகரில் வரும் நவம்பர் 7ம் தேதி சர்வதேச இணைய மாநாடு நடைபெற உள்ளது. சீனாவின் சைபர் ஸ்பேஸ் நிர்வாகம் மற்றும் ஜீஜியாங் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள இம்மாநாடு மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
நவம்பர் 7-ம் தேதி சீனாவில் சர்வதேச இணைய மாநாடு

சீனாவின் வூஜென் நகரில் வரும் நவம்பர் 7ம் தேதி சர்வதேச இணைய மாநாடு நடைபெற உள்ளது. சீனாவின் சைபர் ஸ்பேஸ் நிர்வாகம் மற்றும் ஜீஜியாங் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள இம்மாநாடு மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. 

ஒருங்கிணைந்த உலகளாவிய பகிர்வு மற்றும் அனைவராலும் நிர்வகிக்கப்படுவதன் மூலம் ஒரு பகிரங்க விவாதத்தை பகிர்ந்து கொள்ளும் சைபர்ஸ்பேஸ் சமுதாயத்தை உருவாக்குவது என்ற பொருளில்  ஆண்டுதோறும் இம்மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. முதலாவது சர்வதேச இணைய மாநாடு கடந்த 2014ம் ஆண்டில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இவாண்டு நடைபெறும் 5வது இணைய மாநாட்டில் 7ம் தேதி காலை சீனத் தலைவர்களின் தொடக்க உரையுடன் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து சீனா மற்றும் சர்வதேச முக்கிய பிரமுகர்கள் உரையாற்றுகின்றனர். அதைத் தொடர்ந்து கடந்த காலத்தை மறுபரிசீலனை செய்தல் மற்றும் எதிர்காலத்தைத் தீர்மானித்தல், உலக முன்னணி இணைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனைகள் வெளியிடப்படுகிறது.

இரண்டாம் நாள் நிகழ்வாக நவம்பர் 8-ம் தேதி காலை இணைய உலகின் எதிர்காலம் குறித்து  நிபுணர்கள் மற்றும் வர்த்தக தலைவர்கள் கலந்து கொள்ளும் கருத்துக்களம்,  உலக முன்னணி இணைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனைகள் வெளியீட்டு விழா நடக்கிறது.

இதையடுத்து,  ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள், 5 ஜி தொழில்நுட்பம்,  தர நிலை மற்றும் எதிர்கால பயன்பாடுகள், இணையத்தோடு இணைக்கப்பட்ட உலகம் நோக்கி  நிதி தொழில்நுட்பம், மற்றும் நம்பிக்கை மிகுந்த சமூகத்தை கட்டியமைப்பது குறித்த கருத்துரைகளும், தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு,  சைபர் பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்பு பற்றியும் விவாதிகப்பட உள்ளது. மேலும் ஆன்லைன் கலாச்சார பரிவர்த்தனைகள் மற்றும்  புதிய சகாப்தத்தில் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்து வணிக தலைவர்கள் உரையாடல்களும் இடம் பெற உள்ளது.  ஊடகத் துறையின் மாற்றம், மற்றும் புதுமையான தொடர்புகள் பற்றியும் சைபர்ஸ்பேசில் உள்ள நெறிமுறைகள், நடைமுறைகள் மற்றும் ஆராய்ச்சிகள் பற்றியும் இக்கருத்தரங்கில் நடைபெற உள்ளது.

4 மற்றும் 5 வது அமர்வில் இணையதளம்  மூலம் தொண்டு மற்றும் வறுமை ஒழிப்பு, இணையத்தின் மூலம் பொது சேவை திறன் ஒருங்கிணைப்பு மற்றும் டிஜிட்டல் பட்டுச் சாலையில் சர்வதேச ஒத்துழைப்பு பற்றிய கருத்துக்களம், டிஜிட்டல் பிரிவை இணைக்கும் அமைச்சர் மன்றம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன.

நிறைவு நாளான 9ம் தேதி  சீன மற்றும் சர்வதேச விருந்தினர்களின் உரை, ஐந்தாவது உலக இணைய மாநாட்டின் சாதனைகள் பற்றிய சுருக்கம் ஆகியவை இடம்பெற உள்ளது. 

செய்தி: திருமலை சோமு
பெய்ஜிங்கில் இருந்து
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com