மியான்மர்: சிறையை உடைத்து 41 கைதிகள் தப்பி ஓட்டம்

மியான்மரில் சிறையை உடைத்து 41 கைதிகள் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மர்: சிறையை உடைத்து 41 கைதிகள் தப்பி ஓட்டம்

மியான்மரில் சிறையை உடைத்து 41 கைதிகள் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
 மியான்மர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 41 கைதிகள் ஞாயிற்றுக்கிழமை காலை கலவரத்தில் ஈடுபட்டு தாங்கள் அடைக்கப்பட்டிருந்த சிறை வளாகத்தை உடைத்து வெளியேறினர். அப்போது தடுத்த காவல் துறை அதிகாரியை அவர்கள் பயங்கரமாக தாக்கினர். இதில், அவர் பலத்த காயமடைந்தார்.
 பின்னர் அந்த கைதிகள், கிழக்கு கரேன் மாகாணத்தில் இருந்து ஹபா-அன் சிறைக்கு வந்த லாரியை மடக்கி அதில் ஏறிக்கொண்டு சிறையின் வாயில்களை உடைத்து தப்பித்து சென்றனர். தப்பியோடிய கைதிகளில் 3 பேர் பிடிபட்டுள்ளனர். எஞ்சிய கைதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பக்கத்து கிராமங்களில் புதிய நபர்களின் நடமாட்டம் காணப்பட்டால் கிராமவாசிகள் உடனடியாக தகவல் தெரிவிக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com