மோசமான நிலையில் பொருளாதாரம்: தென் கொரிய அதிபர் மீது பொதுமக்கள் அதிருப்தி

தென் கொரியாவின் பொருளாதாரம் மோசமாக உள்ள சூழலில் அந்நாட்டின் அதிபர் மூன் ஜே-இன் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளது ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

 இதுகுறித்து அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 தென் கொரிய மக்களிடம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பாதிக்கும் மேற்பட்டோர் வட கொரியாவுடன் அடுத்த வாரம் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பிராந்திய அணு ஆயுத விவகாரத்தில் எந்த திருப்புமுனையும் ஏற்படப் போவதில்லை என்றே தெரிவித்துள்ளனர்.
 மேலும், தென் கொரியாவின் உள்நாட்டு பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளதை சரி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் மட்டும் பொதுமக்களின் ஆதரவை அதிபர் தக்க வைத்துக் கொள்ள முடியாது. எனவே அந்த விவகாரத்தை விட்டுவிட்டு சொந்த நாட்டு பிரச்னைகளில் மூன்-ஜே-இன் கவனத்தை திருப்ப வேண்டும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com