பூப்பந்துப் போட்டி: இ.டி.வட்ட அணி வெற்றி

கோலார் தங்கவயலில் நடந்த பூப்பந்து விளையாட்டுப் போட்டியின் இறுதிச் சுற்றில் இ.டி.வட்ட அணி வெற்றி பெற்றது. கோலார் தங்கவயல் தங்க சுரங்கத்

கோலார் தங்கவயலில் நடந்த பூப்பந்து விளையாட்டுப் போட்டியின் இறுதிச் சுற்றில் இ.டி.வட்ட அணி வெற்றி பெற்றது.
கோலார் தங்கவயல் தங்க சுரங்கத் தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளில் தங்க சுரங்க நிறுவனம், தொழிலாளர்களின் பொழுது போக்கிற்காகவும், அதன் மூலம் உடல் பயிற்சி செய்து சுகாதாரமாக வாழவும் விளையாட்டு அரங்கங்களை கட்டி வைத்துள்ளது. பணி முடித்த பிறகு தொழிலாளர்கள் இந்த அரங்குகளில் கேரம், டேபிள் டென்னிஸ் போன்ற உள் அரங்க விளையாட்டுக்களையும், அரங்கின் வெளியே மைதானத்தில் கால்பந்து, கபடி, பூப்பந்து போன்ற விளையாட்டுக்களை ஆடும் வசதி செய்து தரப்பட்டிருந்தது. இந்த அரங்குகளில் அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ள படிப்பகங்களும் இருந்தன. தங்கச் சுரங்கம் மூடப்பட்ட பிறகு, இந்த அரங்கங்கள் பராமரிப்பு இல்லாமல் போயின. இதனால் அங்குள்ள இளைஞர்களுக்கு படிப்பகம், விளையாட்டுகளின் மீது ஆர்வம் குறைந்தது. இதனால் பகுதி தோறும் உள்ள இந்த விளையாட்டு அரங்கங்கள் பயன்பாட்டில் இல்லாமல் செயல் இழந்த நிலையில் உள்ளன. இவற்றில் ஓரிரு விளையாட்டு அரங்கங்கள் ஓரளவு செயல்பாட்டில் உள்ளன. இந்த அரங்கங்களில் கில்பர்ட்ஸ் விளையாட்டு சங்கம் சார்பில் ஒரு சில விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வந்தன. கில்பர்ட்ஸ் விளையாட்டு சங்கம் சார்பில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த அஜித் நினைவு பூப்பந்து விளையாட்டுப் போட்டி 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வந்தது. போட்டியில் தங்கவயலின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 20 பூப்பந்து அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
கடந்த இரண்டு மாதங்களாக நடந்த இந்தப் போட்டிகளின் இறுதிச் சுற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இறுதிச் சுற்றில் இ.டி.வட்டத்தைச் சேர்ந்த அணியும், லூர்து நகரைச் சேர்ந்த அணியும் மோதின. இதில் இ.டி.வட்டத்தைச் சேர்ந்த அணி வெற்றிப் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிக்கும் விழாவில் கில்பர்ட்ஸ் விளையாட்டு சங்கத்தைச் சேர்ந்த சந்துரு, வேலு, பிரபாகரன், எஸ்.டி.அனந்தன், அந்து ராஜ் லீனா மார்ட்டின் ஆகியோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற அணிக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் தங்கராஜ் பரிசு கோப்பையும்,ரொக்கப் பரிசையும் வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com