விவசாயிகள் மீதான நடவடிக்கைக்கு பாஜக கண்டனம்

விவசாயிகள் மீதான நடவடிக்கைக்கு பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா கண்டனம் தெரிவித்துள்ளார்.


விவசாயிகள் மீதான நடவடிக்கைக்கு பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகள் மீது ம.ஜ.த. -காங்கிரஸ் அரசுக்கு சிறிதும் அக்கறை இல்லை. அதனால்தான் விவசாயிகள், குறிப்பாக பெண்களை கைது செய்துள்ளனர். மேலும் விவசாயிகள் மீது வழக்கு பதிந்துள்ளனர்.
கர்நாடக அரசின் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். முதல்வர் குமாரசாமியின் விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கையை கண்டிக்கிறேன்.
அரசை குறைகூறும் பெண்ணுக்கு பொதுமேடையில் நின்று கொண்டு பதிலளித்த முதல்வர் குமாரசாமியின் செயல் வருந்தக் கூடியதாகும். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை இழிவாகப் பேசியதன் மூலம் மாநிலத்தின் அனைத்து பெண்களையும் முதல்வர் குமாரசாமி அவமதித்துள்ளார். இதற்காக முதல்வர் குமாரசாமி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் உள்நோக்கத்தை முதல்வர் குமாரசாமி சந்தேகித்துள்ளார். இது முதல்வர் பதவிக்கு அழகு சேர்ப்பதல்ல. விவசாயிகளை குண்டர்கள் என்று அழைத்ததன் மூலம் முதல்வர் குமாரசாமி மாபெரும் தவறிழைத்துவிட்டார். இது விவசாயிகள் மீது ம.ஜ.த. கொண்டிருக்கும் மோசமான அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது. இது வெட்கக்கேடானதாகும். எந்தச் சூழ்நிலையிலும் தங்களது உரிமையை நிலைநாட்ட மக்களுக்கு அதிகாரமுள்ளது. மக்களின் குறைகளை தீர்க்க வேண்டியதுதான் அரசின் கடமையாகும்.
முந்தைய அரசு செய்யதவறியதை அடுத்த அரசு தொடர வேண்டும். இதைக்கூட தெரிந்திருக்காமல் குமாரசாமி முதல்வராக இருக்கிறார். முதல்வர் குமாரசாமி தனது அரசு நிர்வாகத்தில் காணப்படும் இயலாமையை கோபமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
முதல்வர் குமாரசாமி தனது நேரத்தை முழக்கங்கள் கூறுவதன் மூலம் விரயமாக்கி வருகிறார். கூட்டணி அரசின் அணுகுமுறையை எதிர்த்துபோராடும் விவசாயிகளுடன் பாஜக கைகோர்த்து போராடும் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com