ஹாசனில் இன்று மஜத எம்.எல்.ஏ.க்களின் அவசரக் கூட்டம்

கர்நாடகத்தில் அரசியல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹாசனில் சனிக்கிழமை மஜத

கர்நாடகத்தில் அரசியல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹாசனில் சனிக்கிழமை மஜத எம்எல்ஏக்களின் அவசரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க தங்களது மஜத கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் எச்.கே.குமாரசாமி, தேவானந்த் செளஹான், கே.சீனிவாஸ்மூர்த்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனில்சிக்கமாது, பி.சி.பாட்டீல், எம்.டி.பி.நாகராஜ், சிவள்ளி, ரகீம்கான் உள்ளிட்டோரை பாஜகவுக்கு இழுக்க அக்கட்சியினர் தொடர்ந்து முயற்சித்து வருவதாக பேரவைத் தலைவர் ரமேஷ்குமாரிடம் மஜத வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளது. 
ஆட்சிக் கவிழ்ப்புக்கு காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் 16 பேரை மும்பைக்கு அழைத்து செல்ல பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் பரவியது. எந்த நேரத்திலும் ஆட்சிக் கவிழலாம் என்று பாஜக கூறிவரும் நிலையில், ஆட்சியை தக்கவைப்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஹாசனில் உள்ள ஹொய்சளா கேளிக்கை விடுதியில் சனிக்கிழமை மஜத எம்எல்ஏக்களின் அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. 
இக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடா, முதல்வர் குமாரசாமி, அமைச்சர் எச்.டி.ரேவண்ணா உள்ளிட்டோர் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். இக்கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com