மனநலன்: பொதுமக்களுக்கு சுற்றுலா விழிப்புணர்வு

மனநலன்  குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நிம்ஹான்ஸ் மருத்துவமனையில்   பொதுமக்கள் சுற்றுலாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மனநலன்  குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நிம்ஹான்ஸ் மருத்துவமனையில்   பொதுமக்கள் சுற்றுலாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு, ஒசூர் சாலையில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான நிம்ஹான்ஸ் மருத்துவமனை, இந்தியாவில் மனநலனுக்காக இயங்கிவரும் ஒரே மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனையில் மனநலம் சார்ந்த அனைத்து வகையான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. 
இங்கு சிகிச்சை பெற இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமானோர் வந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில், மனநலம் சார்ந்து மக்கள் மனதில் நிழலாடும் ஐயப்பாடுகளைப் போக்கும் நோக்கில் அதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த நிம்ஹான்ஸ் மருத்துவமனை முடிவுசெய்துள்ளது. இதற்காக நிம்ஹான்ஸ் மருத்துவமனையின் துறைகள், அங்குவழங்கப்படும் சிகிச்சைகளை பொதுமக்கள் கண்டு, உண்மை நிலையை அறிந்துகொள்வதற்காக பொதுமக்கள் சுற்றுலா திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இத்திட்டத்தில் முன்அனுமதி பெற்று மருத்துவமனைக்கு வருகைதரும் பொதுமக்கள், வளாகத்தில் அமைந்துள்ள அனைத்து துறைகளையும் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படவிருக்கிறார்கள்.
இதுகுறித்து நிம்ஹான்ஸ் மருத்துவமனையின் மனநலக் கல்வித் துறை இணைபேராசிரியர் டாக்டர் கே.எஸ்.மீனா கூறியது:
மனநோயால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் அதிர்ச்சி சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்ற சந்தேகம் பெரும்பாலானோரிடம் காணப்படுகிறது. மனநலம் சார்ந்த இதுபோன்ற பல்வேறு சந்தேகங்களை போக்குவதற்காக நிம்ஹான்ஸ் மருத்துவமனையின் துறைகளை பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கவிருக்கிறோம். 
நிம்ஹான்ஸ் வளாகத்தில் "களங்கத்துக்கு எதிரான கதைகள்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் சுற்றுலாவை நடத்தவிருக்கிறோம். இதில் பங்கேற்க ரூ.100 கட்டணம் செலுத்தி முன்பதிவுசெய்துகொண்டால், நிம்ஹான்ஸ் மருத்துவமனையை சுற்றிபார்க்கலாம். இதற்கு மக்களிடம்கிடைக்கும் வரவேற்பை பொருத்து, 2 மாதங்களுக்கு ஒருமுறை இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
தங்குவிடுதிகள் தொடர்பாக மக்களுக்கு இருக்கும் சந்தேகங்கள் நீக்கப்படும். திரைப்படங்களில் காட்டுவது போல மனநோயாளிகள் அணுகப்படுவதில்லை. மனநல பிரச்னைகள் எழுந்தால், அதற்கு உடனடியாக மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொள்ளவும் மக்களை ஊக்குவிப்பதும் இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் இருப்பிடத்திற்கு பொதுமக்களை அனுமதிக்காவிட்டாலும், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை அறிந்து கொள்ளலாம். பாரம்பரிய கட்டடம், மனநல வார்டுகளில் மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com