மக்களவைத் தேர்தல் நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் இடையேயானது:  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

மக்களவைத் தேர்தல் நியாயத்துக்கும், அநியாயத்துக்கும் இடையிலானதாகும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.


மக்களவைத் தேர்தல் நியாயத்துக்கும், அநியாயத்துக்கும் இடையிலானதாகும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
சித்ரதுர்காவில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றுஅவர் பேசியது: தற்போது நடந்துவரும் மக்களவைத் தேர்தல், நியாயத்துக்கும், அநியாயத்துக்கும்; பொய் வாக்குறுதிகளுக்கும், உண்மை வாக்குறுதிகளுக்கும் இடையிலான சண்டையாகும். இந்தத் தேர்தல் இருவேறு கொள்கைகளுக்கு இடையிலான மோதலாகும். ஒரு பக்கம் பகைமை, கோபம், பிரிவினைவாத அரசியல்; மற்றொருபுறம் அன்பு, பாசம், சகோதரத்துவ அரசியல். பிரதமர் மோடி, மக்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.15 லட்சம் செலுத்துவதாக பொய் வாக்குறுதியை அளித்திருந்தார். ஆனால், மத்தியில் காங்கிரஸ் அரசு அமைந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் வறுமையால் வாடும் ஏழைப் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.3.6 லட்சம் செலுத்தப்படும். 
பிரதமர் மோடி தன்னைத் தானே காவலாளி என்று கூறிக்கொண்டிருக்கிறார். பிரதமர் மோடி யாருக்கு காவலாளியாக செயல்படுகிறார். விவசாயிகள், தொழிலாளர்கள், வேலைவாய்ப்பற்றோர் வீடுகளுக்கு வெளியே காவலாளியைக் காண முடிந்ததா? ஆனால், தொழிலதிபர் அனில் அம்பானி வீட்டுக்கு வெளியே காவலாளியாக பிரதமர் மோடி இருக்கிறார். 
நாட்டில் உள்ள 15 முதல் 20 தொழிலதிபர்களுக்கு மட்டுமே பிரதமர் மோடி காவலாளியாக உள்ளார். ரூ.15 லட்சம் அளிப்பதாக பிரதமர் மோடி கூறியிருந்ததை அமித் ஷா வெற்று வாக்குறுதி என்று விளக்கம் அளித்தார். நான் காவலாளியாக இருக்க விரும்பவில்லை. ஆனால் மக்களின் குரலாக இருக்க விரும்புகிறேன். விவசாயிகளை சிறைக்கு அனுப்பிவரும் பிரதமர் மோடி, வங்கிக் கடனை செலுத்தாமல் மோசடி செய்த அனில் அம்பானியை காப்பாற்றி வருகிறார் என்றார் அவர். 
மைசூரு மாவட்டத்தின் கே.ஆர்.நகரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும் பங்கேற்று ராகுல் காந்தி பேசினார். இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடா, முதல்வர் குமாரசாமி, முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com