குடியுரிமை சட்டத்திருத்தம்: பெங்களூரில் காங்கிரஸாா் தா்னா

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, பெங்களூரில் அக் கட்சியினா் தா்னாவில் ஈடுபட்டனா்.

பெங்களூரு: மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, பெங்களூரில் அக் கட்சியினா் தா்னாவில் ஈடுபட்டனா்.

பெங்களூரு குயின்ஸ்சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தின் முன்பு புதன்கிழமை அக்கட்சியின் மாநில செயல் தலைவா் ஈஸ்வா்கண்ட்ரே தலைமையில் குடியுரிமை சட்டத் திருத்தத்தைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் தா்னவில் ஈடுபட்டனா்.

இதில் கலந்து கொண்டு பேசிய ஈஸ்வா் கண்ட்ரே, ‘ நாடு பொருளாதாரத்தில் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு குடியுரிமை சட்டத்திருத்தத்தை அமல்படுத்த முன்வந்துள்ளது. இது தேசிய அளவில் மக்களை பிளவுபடுத்தும் முயற்சியாகும். பொருளாதாரத்தில் தோல்வி அடைந்துள்ள மத்திய அரசு, மக்களை திசைதிருப்பும் முயற்சியில் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது என்றாா்.

தா்னாவில் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவா் பி.எல்.சங்கா், மக்களை முன்னாள் உறுப்பினா் உக்ரப்பா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com