பெங்களூரில் ஜன. 28-ஆம் தேதி முதல் ஹோம்பேக்கிங் பயிற்சி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து பேக்கிங் அண்ட் கேக் ஆர்ட் இன்ஸ்டிடியூட் வெளியிட்ட அறிக்கை: பேக்கிங் அண்ட் கேக் ஆர்ட் இன்ஸ்டிடியூட் சார்பில் ஜன. 28-ஆம் தேதி முதல் பிப். 2-ஆம் தேதிவரை பெங்களூரில் ஹோம்பேக்கிங் பயிற்சி வழங்கப்படுகிறது.
பேக்கிங் கலையில் தொழில்நுட்ப ஆற்றலை வளர்ப்பதற்காக நடத்தப்படும் இப்பயிற்சியில் யார் வேண்டுமானாலும் பங்கேற்லாம். முட்டைகள் இல்லாமல் ஹோம்பேக்கிங் செய்வது குறித்த செய்முறை பயிற்சியும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 8088601601, 9341169607 என்ற செல்லிடப்பேசி எண்கள் மற்றும் www.ibcablr.net என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.