முருகன் கல்யாண இசைவிழா

பெங்களூரில் வியாழக்கிழமை முருகன் கல்யாண இசைவிழா நடக்கவிருக்கிறது.

பெங்களூரில் வியாழக்கிழமை முருகன் கல்யாண இசைவிழா நடக்கவிருக்கிறது.
மகாகவி சுப்பிரமணிய பாரதியின் வாழ்க்கை வரலாற்றை இசைநாடகமாக அரங்கேற்றிய மும்பையை சேர்ந்த பி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி இயல், இசை, நாடகக் கலையில் சிறப்பு பெற்றவர். பெங்களூரு, பானசவாடி முதன்மைச்சாலை, சுப்பையா பாளையாவில் உள்ள சீதாராமா கல்யாணமண்டபத்தில் ஜூலை 11-ஆம் தேதி(வியாழக்கிழமை) காலை 9மணி முதல் நண்பகல் 12.30மணி வரை தமிழ்க்கடவுள் முருகன், வள்ளி மற்றும் தேவயானையுடன் திருமணம் செய்துகொள்ளும் முருகன் கல்யாண இசை விழா அரங்கேற்றப்படுகிறது.
பி.எஸ்.கிருஷ்ணமூர்த்தியின் இசை மற்றும் பாடல்களுடன் முருகன் கல்யாண இசைவிழா நடக்கிறது. இதில் மாப்பிள்ளை வரவேற்பு, ஊஞ்சலாட்டம், மாலை மாற்றல், சோபனம், எண்ணெய் குளியல் போன்றவை இடம் பெறுகிறது. முருகன் கல்யாணத்தை முன்னிட்டு காவடியாட்டம் நடக்கவிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com