நீர் ஆதாரத்தை மேம்படுத்தி விவசாயிகளின் நலன் காக்க நபார்டு வங்கி முடிவு

நீர் ஆதாரத்தை மேம்படுத்தி விவசாயிகளின் நலன் காக்க நபார்டு வங்கி முடிவு செய்துள்ளது.

நீர் ஆதாரத்தை மேம்படுத்தி விவசாயிகளின் நலன் காக்க நபார்டு வங்கி முடிவு செய்துள்ளது.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை நபார்டு வங்கியின் 38-ஆவது நிறுவனர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் கர்நாடக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் வந்திதா சர்மா, சின்டிகேட் வங்கியின் மேலாண் இயக்குநர் மிருத்ஞ்ஜெயா, நபார்டு வங்கியின் தலைமை பொதுமேலாளர் பி.வி.எஸ் சூர்யகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூர்யகுமார் பேசியது: விவசாயிகளை மேம்படுத்தும் பணியில் நபார்டு வங்கி தொடந்து பணியாற்றி வருகிறது. மாநிலத்தில் வறட்சி நிலவுவதால், நீர் ஆதாரத்தை மேம்படுத்தி, விவசாயிகளின் நலன் காக்க நபார்டு வங்கி முடிவு செய்துள்ளது. நபார்டு வங்கியின் 38-வது நிறுவனர் தினத்தையொட்டி, நீர் ஆதாரத்தை மேம்படுத்தும் தொண்டு நிறுவனத்தினரையும், இயற்கையாக விளைவிக்கப்பட்ட வேளாண்பொருள்களை விற்பனை செய்பவர்களையும், மண்வளம் குறித்த விழிப்புணர்ச்சி ஏற்படுத்துபவர்களையும் கெளரவித்து மரியாதை செய்துள்ளோம். 
கடந்த 37 ஆண்டுகளில் கிராமங்களில் மிகவும் பின்தங்கியுள்ள விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, விவசாயத்திற்கு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும் அறிவுறித்தி வருகிறோம். கிராம வளர்ச்சியில் அரசும், தேசிய வங்கிகளும் முக்கிய பங்காற்றி வருகின்றன. இதன்மூலம் கிராமத்தில் உள்ளவர்களும், விவசாயிகளும் பொருளாதாரத்தில் முன்னேற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிராமங்களின் பங்களிப்பால் மட்டுமே எதிர்க்கால இந்தியா சிறந்து விளங்க உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com