கர்நாடக திமுக நிர்வாகிகள் கூட்டம்

கர்நாடக மாநில திமுக நிர்வாகிகள் கூட்டம் மார்ச் 10-ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

கர்நாடக மாநில திமுக நிர்வாகிகள் கூட்டம் மார்ச் 10-ஆம் தேதி நடக்கவிருக்கிறது.
இது குறித்து கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  கர்நாடக மாநில திமுக நிர்வாகிகள் குழு கூட்டம் பெங்களூரு, ராமசந்திரபுரத்தில் உள்ள கலைஞரகத்தில் மார்ச் 10-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடக்கவிருக்கிறது.  மாநில திமுக அவைத் தலைவர் மொ.பெரியசாமி தலைமையில் நடக்கும் இக் கூட்டத்தில் தலைமை செயற்குழு,  பொதுக்குழு உறுப்பினர்கள்,  இளைஞர் அணி, மகளிர் அணி, இலக்கிய அணி, தொமுச பேரவை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.  இக்கூட்டத்தில் இளைஞர் எழுச்சி நாள் விழாக் கூட்டம், திமுக தலைவரும் மறைந்த முன்னாள் தமிழக முதல்வருமான மு.கருணாநிதியின் சிலை அமைக்கும் பணி,  கழக ஆக்கப் பணிகள் குறித்துவிவாதிக்கப்படவிருக்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com