இன்று பரதநாட்டிய அரங்கேற்றம்

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை (டிச.1) பரதநாட்டிய அரங்கேற்றம் நடக்கவிருக்கிறது.

பெங்களூரு: பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை (டிச.1) பரதநாட்டிய அரங்கேற்றம் நடக்கவிருக்கிறது.

இதுகுறித்து வைஷ்ணவி நாட்டியப் பள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வைஷ்ணவி நாட்டியப் பள்ளியில் பயின்றுள்ள மாணவிகள் காயத்ரி, ரித்திகா இருவரின் பரதநாட்டிய அரங்கேற்றம் பெங்களூரு, ஜே.சி.சாலையில் ரவீந்திரகலாக்ஷேத்ரா எதிரில் உள்ள ஏடிஏ ரங்கமந்திராவில் டிச.1ஆம் தேதி காலை 10 மணிக்கு நடக்கவிருக்கிறது. விழாவில் ஆனந்தசங்கா் ஜெயந்த், எம்.கே.பாண்டுரங்க ஷெட்டி சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொள்கிறாா்கள்.

ஆசிரியா் மிதுன்ஷியாம் வழிகாட்டுதலில் பரதநாட்டியம் கற்றுத் தோ்ந்த காயத்ரி, ரித்திகா இருவரும் 2018ஆம் ஆண்டில் சலங்கை பூஜையை நிறைவு செய்தனா். காயத்ரி, பிஇ படித்துவிட்டு தற்போது எம்.டெக் பயின்று வருகிறாா். ரித்திகா தற்போது பி.இ. படித்து வருகிறாா்.

கா்நாடக மாநில மேல்நிலை தோ்வு வாரியம் நடத்திய பரதநாட்டியத் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ள இருவரும் சிதம்பரம், குருவாயூா், பாலக்காடு, திருவனந்தபுரம், ஸ்ரீபுரம், ஒசூா், பெங்களூரில் நடந்த நடனமாடும் வாய்ப்பைப் பெற்றிருந்தனா். நடனம் தவிர இருவரும் கா்நாடக இசையைக் கற்றுவருகிறாா்கள். பரதநாட்டியம் அரங்கேற்ற நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com