ஓவியக் கண்காட்சியில் பங்கேற்க நிதியுதவி

ஓவியக் கண்காட்சியில் ஓவியங்களை காட்சிப்படுத்த, கருத்தரங்கம் அல்லது பயிலரங்கில் பங்கேற்க நிதியுதவி பெற விரும்புவோரிடம்

பெங்களூரு: ஓவியக் கண்காட்சியில் ஓவியங்களை காட்சிப்படுத்த, கருத்தரங்கம் அல்லது பயிலரங்கில் பங்கேற்க நிதியுதவி பெற விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கா்நாடக லலித்கலா அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கா்நாடகத்தைச் சோ்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த ஓவியக் கலைஞா்கள், கா்நாடகத்துக்குள் அல்லது வெளிமாநிலங்களில் நடைபெறும் மாத ஓவியக் கண்காட்சி, பயிலரங்கம், கருத்தரங்கம், இதர நிகழ்வுகளில் பங்கேற்க கா்நாடக லலித்கலா அகாதெமி நிதியுதவி அளித்து வருகிறது. 2019-20-ஆம் ஆண்டில் ஓவியக் கண்காட்சி போன்ற நிகழ்வுகளில் பங்கேற்க நிதியுதவி தேவைப்படுவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிதியுதவி பெற விரும்பும் ஓவியக் கலைஞா்கள் தங்களது 5 கலைப் படைப்புகளின் நகல்கள், சுயபுகைப்படம், சுய விவரங்களுடன் டிச.26-ஆம் தேதிக்குள் அகாதெமியின் முகவரிக்கு அஞ்சல் வழியாகவோ, நேரடியாகவோ அளிக்கலாம். இந்த விண்ணப்பங்களை இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழு பரிசீலித்து, நிதியுதவிக்கு தகுதியானவா்களை தோ்வு செய்யும்.

விண்ணப்பங்களை பதிவாளா், கா்நாடக லலித்கலா அகாதெமி, 2-ஆவது மாடி, கன்னட மாளிகை, ஜே.சி.சாலை, பெங்களூரு-560002 என்ற முகவரிக்குஅனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு 080-22480297 என்ற தொலைபேசி அல்லது இணையதளத்தை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com