காங்கிரஸ் தலைவர்களின் நடவடிக்கையால் ரமேஷ் ஜார்கிஹோளி அதிருப்தி: ஷோபா கரந்தலஜே

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் நடவடிக்கையால் அக்கட்சியின் எம்.எல்.ஏ. ரமேஷ் ஜார்கிஹோளி அதிருப்தி அடைந்துள்ளதாக பாஜக மாநிலச்


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் நடவடிக்கையால் அக்கட்சியின் எம்.எல்.ஏ. ரமேஷ் ஜார்கிஹோளி அதிருப்தி அடைந்துள்ளதாக பாஜக மாநிலச் செயலாளர் ஷோபா கரந்தலஜே தெரிவித்தார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 
காங்கிரஸ், மஜத கூட்டணியால் இரு கட்சிகளிலும் உள்கட்சி பிரச்னை வெடித்துள்ளது. இதனால் அக்கட்சிகளில் அதிகாரத்தை பிடிப்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்கு உதாரணமாக ரமேஷ் ஜார்கிஹோளி விவகாரத்தை கூறலாம். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா மீண்டும் முதல்வர் நாற்காலியைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கியது முதலே அக்கட்சியில் பிரச்னை தலைதூக்க ஆரம்பித்தது. முதல்வர் நாற்காலி மீது அமைச்சர் டி.கே.சிவக்குமாரும், துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், அமைச்சர் எச்.டி.ரேவண்ணா ஆகியோரும் கனவு கண்டுள்ளனர்.
இதனால் தனது பதவியை காப்பாற்றிக் கொள்ள முதல்வர் குமாரசாமி படாதபாடுபட்டுவருகிறார். மக்களவைத் தேர்தல் முடிவு வெளியான பிறகு கூட்டணி அரசு கவிழும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அதற்கு முன்பே ஆட்சி கவிழ்ந்தாலும் ஆச்சரியமில்லை. கூட்டணி அரசில் எதுவும் சுமுகமாய் இல்லை என்பதற்கு பல்வேறு உதாரணங்களைக் கூற முடியும். இதனால் நாங்கள் ஆபரேஷன் கமலா திட்டத்தைச் செயல்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. கூட்டணி கட்சிகளிடையே உள்ள குழப்பத்தால், ஆட்சி தானாகவே கவிழும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com