அடுத்த சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை: ஜி.டி.தேவெகெளடா

அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று மஜத முன்னாள் அமைச்சர் ஜி.டி.தேவெகெளடா தெரிவித்தார்.

அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று மஜத முன்னாள் அமைச்சர் ஜி.டி.தேவெகெளடா தெரிவித்தார்.
மைசூருரில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலைகளைக் காணும்போது,  அடுத்த சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பமில்லை. அரசியல் எனக்கு போதுமானதாக உள்ளது. யாருடைய உதவியும் இல்லாமல் நான் அரசியல் உயர்ந்தேன். 
எனது மகனுக்கு  அரசியல் பயணத்தை தொடரவிருப்பம் இருந்தால், கடினமாக உழைத்து முன்னுக்கு வரவேண்டும். 
அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடக்கூடாது என்ற எனது கருத்தை மஜத தேசியத்தலைவர் எச்.டி.தேவெகெளடா, முன்னாள் முதல்வர் குமாரசாமியிடம் கூறவில்லை. 
சட்டப் பேரவை உறுப்பினராகத் தொடர இன்னும் மூன்றரை ஆண்டுகாலம் இருக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் தொகுதி மக்களின் நலனுக்காக முழு நேரத்தையும் செலவழிப்பேன். தேர்தலைச் சந்தித்தபிறகு ஏற்படும் மனக்கவலைகள் விவரிக்க முடியாதவை. 
தேர்தலுக்காக யாருடைய உதவியையும் எடுத்துகொள்ளவில்லை. எச்.டி.தேவெகெளடா, குமாரசாமி அல்லது சித்தராமையா என யாருமே உதவிசெய்ததில்லை. குமாரசாமி தலைமையில் அமைச்சரவை அமைந்தபோது நான் சற்றுவிலகியிருந்தது உண்மைதான். ஏனெனில், எனக்கு பிடித்தமான துறையை வழங்குமாறு கேட்டுகொண்டிருந்தேன். ஆனால் உயர்கல்வித்துறை அளிக்கப்பட்டது. முடிந்தவரை அந்தத் துறையின் அமைச்சராகச் செயலாற்றினேன். 
உன்சூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு விரைவில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் எனது மகன் ஜி.டி. ஹரீஷ் கெளடாவை நிறுத்துமாறு சிலர் வலியுறுத்துகிறார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், அதுகுறித்து முடிவெடுக்கலாம். இதுகுறித்து எனது மகன் தான் முடிவெடுக்க வேண்டும். எனினும், இடைத்தேர்தலில் எனது மகனை வேட்பாளராக்க விரும்பவில்லை என்று மஜத தலைவர்களிடம் தெரிவித்துவிட்டேன் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com