பாஜக எம்எல்ஏ மீது வழக்கு: காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் தாக்கல்

கர்நாடக பாஜக எம்எல்ஏ பசன கெளடா பாட்டீல் யத்னல் மீது ரூ.204 கோடி நஷ்ட ஈடு கேட்டு மான நஷ்ட வழக்கை

கர்நாடக பாஜக எம்எல்ஏ பசன கெளடா பாட்டீல் யத்னல் மீது ரூ.204 கோடி நஷ்ட ஈடு கேட்டு மான நஷ்ட வழக்கை காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் தொடர்ந்துள்ளார்.
அவதூறான கருத்தைத் தெரிவித்ததாக,   ராமநகரம் மாவட்ட முதல்நிலை நீதியியல் நீதிமன்றத்தில் சிவக்குமார்  அண்மையில் தொடர்ந்த வழக்கானது செப்டம்பர் 18-இல் விசாரணைக்கு வருகிறது.
இதுகுறித்து சிவக்குமார்,ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 பாஜக எம்எல்ஏ பசனகெளடாபாட்டீல் யத்னல், விஜயபுராவில் ஜூன் 23?ஆம் தேதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது, என் மீதான வழக்குகளை வருமான வரித் துறை, அமலாக்கத் துறை விசாரணைக்கு எடுத்துகொள்ளாமல் தடுக்க பாஜக தலைவர்கள்,  மத்திய அமைச்சர்களுக்கு அழுத்தம் கொடுத்துவருவதாக என் மீது குற்றம்சாட்டிஉள்ளார். 
வழக்குகளை கைவிட்டால், கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைக்க மேற்கொண்டிருக்கும் முயற்சியை தடுக்காமல் நடுநிலை வகிக்க உறுதி அளித்ததாகவும் என் மீது பசனகெளடாபாட்டீல்யத்னல் குற்றம்சாட்டியுள்ளார். 
இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, அடிப்படையற்றவை, பொய்யானவை, பொறுப்பற்றவை, பொருத்தமற்றவையாகும். பொதுமக்களிடையே என் மீதான நற்பெயருக்குகளங்கம் ஏற்படுத்துவதற்காக இது போன்ற உள்நோக்கம் கொண்ட கருத்தை பசனகெளடாபாட்டீல் யத்னல் தெரிவித்துள்ளார். இது, கட்சி மீதான எனது விசுவாசம், உண்மைத்தன்மை, நேர்மை மற்றும் கட்சியின் செல்வாக்கை பாதிக்கும் வகையில் உள்ளது. மேலும் பொதுமக்களிடையேயும் எனது பெயர் கெட்டுவிடும் பாதிப்புள்ளது. என் மீதான வழக்குகள் விசாரணையில் உள்ளதால், இது போன்ற அடிப்படையற்ற கருத்துகள் விசாரணை முகமைகளை தவறாக வழிநடத்துவதற்கு உதவும். எனவே, பசவனகெளடாபாட்டீல் யத்னல் மீது ரூ.204கோடி நஷ்ட ஈடுகேட்டு மானநஷ்டவழக்குதொடர்ந்துள்ளேன் என்று  குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com