சுதந்திர தின விழா: போக்குவரத்தில் மாற்றம்

பெங்களூரு மானக்ஷா திடலில் வியாழக்கிழமை( ஆக. 15) நடைபெறும் சுதந்திர தின விழாவையொட்டி மாநகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு மானக்ஷா திடலில் வியாழக்கிழமை( ஆக. 15) நடைபெறும் சுதந்திர தின விழாவையொட்டி மாநகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகரப் போக்குவரத்து போலீஸார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு மானக்ஷா திடலில் வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் 10.30 மணிவை சுதந்திர தின விழா நடைபெறுகிறது. விழாவில் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட முக்கிய பிரமுகர் கலந்து கொள்ள உள்ள நிலையில் மானக்ஷா திடலை சுற்றி உள்ள பகுதிகளில் போக்குவரத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது.
காலை 8.30 மணி முதல் 10.30 மணிவரை கப்பன்சாலை, எம்.ஜி.சாலை, பிரிகெட்சாலை, கும்பளே சதுக்கம்,  ராஜ்பவன்சாலை, சென்ட்ரல்சாலை சதுக்கம், காமராஜர்சாலை, பி.ஆர்.வி. சதுக்கம், கே.ஆர்.சாலை சதுக்கம், குயின்சாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள வரும் பொதுமக்கள் மானக்ஷா திடலைச் சுற்றி போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகளை கருத்தில் கொண்டு, தங்களது சொந்த வாகனங்களைத் தவிர்த்து, மாநகர பேருந்தில் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com