நிவாரண நிதி ஒதுக்குவதில் பாரபட்சம்: காங்கிரஸ்

கர்நாடகத்தில் மழை வெள்ளதால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண நிதி ஒதுக்குவதில்

கர்நாடகத்தில் மழை வெள்ளதால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண நிதி ஒதுக்குவதில் முதல்வர் எடியூரப்பா பாரபட்சம் காட்டுவதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ எச்.கே.பாட்டீல் குற்றஞ்சாட்டினார்.
ஹாவேரி மாவட்டத்தில் புதன்கிழமை வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கர்நாடகத்தில் மழை வெள்ளத்தால் வட கர்நாடகம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், முதல்வர் எடியூரப்பா வட கர்நாடகத்தில் வெள்ள பாதிப்பை பார்வையிட்ட போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண நிதியை வழங்க, நான் ஒன்றும் ரூபாய் நோட்டுகளை அச்சிடவில்லை என்று கூறினார். 
ஆனால், தனது சொந்த மாவட்டமான சிவமொக்காவிற்கு ரூ. 50 கோடியை நிவாரண நிதியாக ஒதுக்கித் தந்துள்ளார். மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தனது சொந்த மாவட்டத்துக்கு மட்டும் அதிக அளவில் நிவாரண நிதியை முதல்வர் ஒதுக்கித் தந்துள்ளார். நிவாரண நிதி ஒதுக்குவதில் முதல்வர் எடியூரப்பா பாரபட்சம் காட்டுவதையே எடுத்து காட்டுகிறது. 
நிவாரண நிதி ஒதுக்குவதில் முதல்வர் எடியூரப்பா அரசியல் செய்கிறார். மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை மத்திய அமைச்சர்கள் 2 பேர் வந்து ஆய்வு செய்த பின்னரும், வெள்ள நிவாரண நிதியை ஒதுக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. 
2009ஆம் ஆண்டு மாநிலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், உடனடியாக ரூ. 2 ஆயிரம் கோடியை ஒதுக்கி தந்தார் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com