தொழில்கல்வி சேர்க்கை: விருப்பப் பதிவு தொடக்கம்

தொழில்கல்வி கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு மற்றொரு சுற்று விருப்பப்பதிவு தொடங்கியது.

தொழில்கல்வி கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு மற்றொரு சுற்று விருப்பப்பதிவு தொடங்கியது.

இதுகுறித்து கர்நாடக தேர்வு ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பண்ணை அறிவியல், தோட்டக்கலை, கால்நடை போன்ற தொழில் கல்லூரிகளுக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்டு எஞ்சியுள்ள சேர்க்கை இடங்கள், மாணவர்கள் ஒப்படைத்த இடங்களை ஒதுக்குவதற்கான மற்றொரு சுற்று விருப்பப்பதிவு சனிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. 

கல்லூரிகளில் மீதமுள்ள சேர்க்கை இடங்கள், பாடப்பிரிவுகள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்படுகின்றன. இந்நிலையில், கடைசி சுற்று விருப்பப்பதிவில் தகுதியான மாணவர்கள் விருப்ப கல்லூரிகள்,விருப்பப்பாடப் பிரிவுகள் குறித்த விவரங்களை ஆக.29-ஆம் தேதி காலை 11 மணி வரை  ஜ்ஜ்ஜ்.ந்ங்ஹ.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவுசெய்யலாம்.

அதன் அடிப்படையில், மாணவர்களுக்கான சேர்க்கை இடங்கள் ஒதுக்கீடு ஆக.29-ஆம் தேதி மாலை 6 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. ஆக.30 முதல் 31-ஆம் தேதிவரை சேர்க்கையை உறுதி செய்யலாம், கட்டணங்களை செலுத்தலாம், சேர்க்கை ஆணையை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனடிப்படையில், செப்.4-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேர்க்கை பெறலாம். ஒருவேளை இந்தகாலக்கெடுவுக்குள் சேர்க்கை பெற தவறினால், சேர்க்கை ஆணை தானாக காலாவதி ஆகிவிடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com