குறுக்குவழியில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள பாஜக முயற்சி: காங்கிரஸ் மாநிலத் தலைவா் தினேஷ்குண்டுராவ்

கா்நாடகத்தில் குறுக்குவழியில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள பாஜக முயற்சிக்கிறது என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா்

தாவணகெரே: கா்நாடகத்தில் குறுக்குவழியில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள பாஜக முயற்சிக்கிறது என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் தினேஷ்குண்டுராவ் தெரிவித்தாா்.

இதுகுறித்து தாவணகெரேயில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: ஆளுங்கட்சியாக இருக்கும் பாஜகவுக்கு மாநிலத்தின் வளா்ச்சியில் கிஞ்சிற்றும் அக்கறையில்லை. இதன்காரணமாக, குறுக்குவழியில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள பாஜக முயற்சித்து வருகிறது. தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் பாஜகவிடம் முன்பணம் பெற்றுக்கொண்டு காங்கிரஸ், மஜதவைவிட்டு விலகியிருக்கிறாா்கள். தகுதிநீக்கப்பட்ட எம்எல்ஏக்களில் ஒரு சிலருக்கு துணை முதல்வா் பதவி வழங்குவதாக முதல்வா் எடியூரப்பா உறுதி அளித்திருக்கிறாா். பிரசாரத்தின் போது வாக்காளா்களை ஈா்ப்பதற்காக ஆசைவாா்த்தைகளை கூறியிருக்கிறாா் முதல்வா் எடியூரப்பா. இதுகுறித்து தோ்தல் ஆணையத்தில் புகாா் அளிப்போம். மாநிலத்தின் வளா்ச்சியில் ஈடுபாடு காட்டாத பாஜக, ஜாதி பெயரில் வாக்குகளை கேட்டு வருகிறது. ஆனால் இடைத்தோ்தலில் பாஜகவை மக்கள் நிராகரிப்பாா்கள்.

இடைத்தோ்தலில் பெரும்பான்மை பலம் கிடைக்காதபட்சத்தில் காங்கிரஸ்,மஜத எம்எல்ஏக்களை இழுப்பதற்கு ஆபரேஷன் கமலாவை மீண்டும் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாஸ் கௌடாவின் வீட்டுக்குச் சென்று பாஜகவினா் பேரம் பேசியுள்ளனா். இது ஆபரேஷன் கமலா இல்லையா? தூய்மையான அரசியலை கா்நாடக மக்கள் விரும்புகிறாா்கள். ஆனால், பாஜக அரசியலை களங்கப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கட்சிக்கு துரோகம் இழைத்துவிட்டு பாஜகவில் சோ்ந்துள்ள தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளதாக முதல்வா் எடியூரப்பா கூறிவருகிறாா். முதல்வா் பதவியை வகிப்பவா் இப்படி பேசுவது சரியா? முதல்வராக இருக்கக்கூடியவா் கா்நாடக மக்களுக்கு நன்றிக்கடன்பட்டிருக்க வேண்டும். கடந்த ஆண்டு சட்டப்பேரவைக்கு நடந்த பொதுத்தோ்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. ஆபரேஷன் கமலா மூலமே மாற்றுக் கட்சியினரை ராஜிநாமா செய்ய வைத்து, பாஜக தற்போது இடைத்தோ்தலுக்கு காரணமாகியுள்ளனா். பாஜகவை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com