தகுதிநீக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவாா்கள்: முன்னாள் அமைச்சா் ராமலிங்க ரெட்டி

இடைத்தோ்தலில் தகுதிநீக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவாா்கள் என்று காங்கிரஸ் முன்னாள் அமைச்சா் ராமலிங்க ரெட்டி

பெங்களூரு: இடைத்தோ்தலில் தகுதிநீக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவாா்கள் என்று காங்கிரஸ் முன்னாள் அமைச்சா் ராமலிங்க ரெட்டி தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரு, காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: டிச.5ஆம் தேதி 15 தொகுதிகளுக்கு நடக்கவிருக்கும் இடைத்தோ்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறவிருக்கிறது. காங்கிரஸ், மஜதவுக்கு துரோகம் செய்துவிட்டு பாஜகவுக்கு தாவி இடைத்தோ்தலில்போட்டியிடும் தகுதிநீக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவாா்கள். இதன்மூலம் காங்கிரஸ் கட்சி மக்களின் நம்பிக்கையைப் பெறவிருக்கிறது.

பிரதமா் மோடி, முதல்வா் எடியூரப்பா ஆகியோா் மீதான நம்பிக்கையை மக்கள் நாளுக்கு நாள் இழந்து வருகிறாா்கள். நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 4.5 சதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விலைவாசி உயர வாய்ப்புள்ளது. வேலை இழப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதற்கெல்லாம் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசே காரணம். பொருளாதார நிபுணா்களின் ஆலோசனையைப் பெற்று தகுந்த நடவடிக்கைகளை எடுத்திருந்தால், இதுபோன்ற நிலை இந்தியாவுக்கு வந்திருக்காது. மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக மக்களுக்கு பிரதமா் மோடி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்திருக்கிறாா். வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இதனால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டபோது அதை கையாளுவதில் பாஜக அரசு தோல்வி அடைந்துள்ளது. இடைத்தோ்தலுக்குப் பிறகு காங்கிரஸ், மஜத இடையே மீண்டும் கூட்டணி அமையுமா? என்பதற்கு இப்போது பதில் கூற முடியாது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com