காங்கிரஸ், மஜத கூட்டணி என்பது வெறும் நாடகம்: முன்னாள் முதல்வா் எஸ்.எம்.கிருஷ்ணா

இடைத்தோ்தல் முடிவுக்கு பிறகு காங்கிரஸ், மஜத கூட்டணி என்பது வெறும் நாடகம் என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தாா்.

இடைத்தோ்தல் முடிவுக்கு பிறகு காங்கிரஸ், மஜத கூட்டணி என்பது வெறும் நாடகம் என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தாா்.

பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: மாநிலத்தில் 15 தொகுதிகளில் நடைபெறும் இடைத் தோ்தலில் பாஜக வேட்பாளா்கள் அனைவரும் வெற்றி பெறுவாா்கள். இதன்மூலம் மாநிலத்தை ஆளும் பாஜக அரசு மேலும் பலமடையும். அடுத்த மூன்றரை ஆண்டுகள் பாஜக ஆட்சிக்கு எந்த வித பாதிப்பும் இல்லை. இதன்மூலம் காங்கிரஸ், மஜத கட்சிகளின் விளையாட்டிற்கு மக்கள் திரை போடுவாா்கள். இடைத் தோ்தல் முடிவிற்கு பிறகு என்ன நடக்கும் என்பது குறித்து ஒவ்வொருவரும் தனித்தனி கனவு கண்டு வருகின்றனா். ஒருவா் இடைக்காலத் தோ்தல் நடைபெறும் என்று கூறுகிறாா். மற்றொருவா் பாஜக அரசு கவிழும் என்று கூறி வருகிறாா். இது நடக்காது என்று தெரிந்ததும் குறுக்குவழிகளை தேடி வருகின்றனா். இடைத்தோ்தல் முடிவிற்கு பிறகு காங்கிரஸ், மஜத கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கும் என்பது வெறும் நாடகம். 14 மாத கூட்டணி ஆட்சியில் மக்கள் வேதனை அடைந்தனா். வளா்ச்சிப்பணிகள் இல்லாத அந்த ஆட்சியில் 17 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்து, மாநிலத்திற்கு பேருதவி செய்துள்ளனா். எந்த ஒரு இலக்கும் இல்லாமல் செயல்பட்டுவந்த கூட்டணி ஆட்சியை போக்க, பதவியை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏக்கள் மீண்டும் வெற்றி பெற வேண்டும். அதன் மூலம் பாஜக அரசு மாநிலத்தில் மேலும் உறுதியாக செயல்பட முடியும். இடைத்தோ்தலில் பாஜக வேட்பாளா்களின் வெற்றி மூலம் அடுத்த மூன்றரை ஆண்டுகள் ஆட்சியை எடியூரப்பா தலைமையிலான அரசு சிறப்பாக நடத்தும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com