மகாலட்சுமி திருவிழா: கானாபூரில் ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடு

மகாலட்சுமி திருவிழாவையொட்டி கானாபூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் ஒரு நிமிடம் நின்று செல்ல ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது

மகாலட்சுமி திருவிழாவையொட்டி கானாபூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் ஒரு நிமிடம் நின்று செல்ல ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: மஹாராஷ்டிர மாநிலம், கானாபூரில் மகாலட்சுமி திருவிழா நடைபெறுவதையொட்டி பிப். 15-ஆம் தேதி முதல் மார்ச் 5-ஆம் தேதி வரை பெங்களூரு-ஆஜ்மீர் வாராந்திர கரீப் நவாஸ் விரைவு ரயில்(16532),  ஆஜ்மீர்-பெங்களூரு வாராந்திர கரீப் நவாஸ் விரைவு ரயில்(16531), பெங்களூரு-பகத்கீ கோத்தி வாராந்திர கரீப் நவாஸ் விரைவு ரயில்(16534), பகத்கீ கோத்தி-பெங்களூரு வாராந்திர கரீப் நவாஸ் விரைவு ரயில்(16533), புணே-எர்ணாக்குளம் வாராந்திர பூர்ணா விரைவு ரயில் (11097), எர்ணாக்குளம் வாராந்திர பூர்ணா விரைவு ரயில் (11098), மங்களூரு-சத்ரபதி சாஹு மஹாராஜ் கோலாபூர் தினசரி விரைவு ரயில் (11303), சத்ரபதி சாஹு மஹாராஜ்கோலாபூர்-மங்களூரு தினசரி விரைவு ரயில் (11304) உள்ளிட்ட அனைத்து ரயில்களும் கானாபூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com