தோட்டக்கலைப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

பெங்களூரு லால்பாக் பூங்காவில் 10 மாத தோட்டக்கலை பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெங்களூரு லால்பாக் பூங்காவில் 10 மாத தோட்டக்கலை பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தோட்டக்கலைத் துறை சார்பில் பெங்களூரு லால்பாக் பூங்காவில் உள்ள தோட்டக்கலை பயிற்சி மையத்தில் 2018-19-ஆம் கல்வியாண்டுக்கான 10மாத தோட்டக்கலைப் பயிற்சி மே 2 முதல் 2020-ஆம் ஆண்டு பிப்.29-ஆம்தேதி வரை நடக்கவிருக்கிறது. 
இந்த பயிற்சியில் பெங்களூரு நகரம், பெங்களூரு ஊரகம், ராமநகரம், தும்கூரு, கோலார், சிக்பளாப்பூர் மாவட்ட மாணவர்களுக்கு வாய்ப்பு
அளிக்கப்படும். 
கன்னடத்தை ஒருபாடமாக கொண்டு எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றுள்ள 18 வயது முதல் 33 வயதுக்கு உட்பட்ட மாணவர்களிடமிருந்து பயிற்சியில் சேர்ந்து படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவர்களின் பெற்றோர்களிடம் கட்டாயம் நிலம் இருக்கவேண்டும். இதற்கான பட்டா ஆவண நகலையும் சமர்பிக்கவேண்டும். 
பெங்களூரு ஊரகம், பெங்களூரு நகரம், தும்கூரு, ராமநகர், சிக்பளாப்பூர், கோலார், தென்கன்னடம், குடகு, மண்டியா, ஹாசன், சாமராஜ்நகர், மைசூரு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் சம்பந்தப்பட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர்களிடம் விண்ணப்பங்களை பெற்று அளிக்கலாம். 
இதுதவிர, பிப்.18 முதல் 28-ஆம் தேதிவரை    w‌w‌w.‌h‌o‌r‌t‌i​c‌u‌l‌t‌u‌r‌e.‌k​a‌r.‌n‌i​c.‌i‌n  என்ற இணையதளத்தில் இருந்தும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மார்ச் 2-ஆம் தேதி நடக்கவிருக்கும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வாகும் பயிற்சியாளருக்கு மாத கல்வி உதவியாக ரூ.1250 ஆயிரம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 080 - 26564538 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com