"குறைபிரசவ குழந்தைகள் பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு தேவை'
By DIN | Published On : 28th February 2019 09:12 AM | Last Updated : 28th February 2019 09:12 AM | அ+அ அ- |

குறைபிரசவ குழந்தைகளைப் பரமரிப்பது குறித்து பெற்றோரிடம் விழிப்புணர்வு தேவை என்று குறைபிரசவ குழந்தைகள் நல மருத்துவர் பிரதாப்சந்திரா தெரிவித்தார்.
பெங்களூரு மதர்ஹுட் மருத்துவமனையில் புதன்கிழமை குறைபிரசவ குழந்தைகள் பராமரிப்பு குறித்த கருத்தில் கலந்து கொண்டு அவர் பேசியது: தாயின் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுவதால் குறை பிரசவம் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி உணவு, மாசு உள்ளிட்டவைகளால் பாதிக்கப்படும் தாய்மார்களுக்கும் குறை பிரசவத்தில் குழந்தைகள் பிறக்கக்கூடும்.
24 வாரம் முதல் 32 வாரம் வரை குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை, எலும்பு உள்ளிட்ட எந்த உறுப்புகளும் வளர்ந்திருக்காது. அது வளரும் வரை தாய் வயிற்றை போல உள்ள இங்குபேட்டரில் வைத்து குழந்தைகளை பாதுக்காக்க வேண்டும். இது வந்த வசதி எல்லா மருத்துவமனைகளிலும் இருக்காது. மதர் ஹுட் உள்ளிட்ட ஒரு சில மருத்துவமனைகளில் மட்டும் இந்த வசதி உள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்டு, குறை பிரசவத்தில் உள்ள குழந்தைகளை பரமாரிக்க வேண்டும்.
இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் அரசுடன் தனியாரும் பங்களிப்பை வழங்க தயாராக உள்ளனர் என்றார்.