சிறு, குறு நிறுவனங்களின் ஜிஎஸ்டி  உச்சவரம்பை உயர்த்தியதற்கு வரவேற்பு

சிறு, குறு, நிறுவனங்களின் பொருள் மற்றும் சேவை வரி உச்ச வரம்பை உயர்த்தியதற்கு கர்நாடக தொழில் வர்த்தகசபைக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

சிறு, குறு, நிறுவனங்களின் பொருள் மற்றும் சேவை வரி உச்ச வரம்பை உயர்த்தியதற்கு கர்நாடக தொழில் வர்த்தகசபைக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவர் சுதாகர் ஷெட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக திகழ்வது சிறு,குறு நிறுவனங்கள். அந்த நிறுவனங்களுக்கான பொருள் மற்றும் சேவை வரி உச்சவரம்பை ரூ. 20 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சமாகவும், ஆண்டு விற்றுமுதலை ரூ. 1 கோடியிலிருந்து 1.5 கோடியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. 
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கர்நாடக தொழில் வர்த்தகசபைக் கூட்டமைப்பு வரவேற்கிறது. நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் சிறு, குறு நிறுவனங்களின் பங்களிப்பு அபரீதமாக உள்ளது என அதில் அவர் தெரிவித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com