பெங்களூரு-சம்பல்பூர் இடையே சிறப்புக்கட்டண, சிறப்பு ரயில்சேவை

பெங்களூரில் இருந்து சம்பல்பூருக்கு சிறப்பு கட்டணத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. 

பெங்களூரில் இருந்து சம்பல்பூருக்கு சிறப்பு கட்டணத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. 
இது குறித்துதென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  கூட்டநெரிசலைக் குறைப்பதற்காக கிழக்கு கடலோர ரயில்வே சார்பில் பெங்களூரில்(பானஸ்வாடி)இருந்து சம்பல்பூருக்கு சிறப்பு கட்டணத்தில் சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட
உள்ளது. 
ரயில் எண்-08301-சம்பல்பூர்-பெங்களூரு(பானஸ்வாடி)சிறப்பு கட்டண, சிறப்பு ரயில் ஜூலை 3-ஆம் தேதிமுதல் புதன்கிழமைகளில் காலை 9.30 மணிக்கு சம்பல்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, வியாழக்கிழமைகளில் பிற்பகல் 1.30 மணிக்கு பெங்களூரு(பானஸ்வாடி) ரயில்நிலையம் வந்தடைகிறது.  இதன் கடைசி சேவை செப்.25-ஆம் தேதி சம்பல்பூரில் இருந்து புறப்படும்.
மறுமார்க்கத்தில், ரயில் எண் 08302-பெங்களூரு(பானஸ்வாடி)-சம்பல்பூர் சிறப்புக்கட்டண, சிறப்பு ரயில் சேவை ரயில் ஜூலை 4-ஆம் தேதி முதல் வியாழக்கிழமைகளில் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, சனிக்கிழமைகளில் காலை 6.35 மணிக்கு சம்பல்பூர் ரயில் நிலையத்திற்கு சென்றடைகிறது.  இதன்கடைசி சேவை செப்.26-ஆம் தேதி பெங்களூரில்(பானஸ்வாடி) இருந்து புறப்படுகிறது.
இந்த ரயில் இருமார்க்கத்திலும் கிருஷ்ணராஜபுரம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சித்தூர், பகாலா, திருப்பதி, ரேணிகுண்டா, குடூர், நெல்லூர், ஒங்கால், விஜயவாடா, ஏலூரு, ராஜமுந்திரி, சாமல்கோட்,விசாகப்பட்டினம், விஜியநகரம், பொப்பிலி, பார்வதிபுரம், ராயகடா, முனிகுடா, கேசிங்கா,திட்லாகர்க், போலங்கீர், பர்கர்க்ரோடு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.  ரயிலில் ஈரடுக்கு குளிரூட்டப்பட்ட ஒரு பெட்டி, மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட 3 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு படுக்கைவசதி கொண்ட 10 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு பொதுவகுப்பு 2 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு இருக்கை, சரக்கு வசதி கொண்ட 2 பெட்டிகள் இடம்பெற்றிருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com