முதுநிலைப் பட்டப்படிப்பு சேர்க்கை:  பொது நுழைவுத் தேர்வு தேதி மாற்றம்

முதுநிலைப் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வுக்கான தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முதுநிலைப் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வுக்கான தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கர்நாடகத் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  கர்நாடகத்தில் இயங்கிவரும் பல்கலைக்கழகங்கள்,  கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்ஆர்க் போன்ற முதுநிலைப் பட்டப்படிப்புகளில் 2019-20-ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெறுவதற்காக பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.  இந்த பொது நுழைவுத் தேர்வு ஜூலை 13,14 ஆகிய தேதிகளில் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  இதில் மாற்றம் செய்து, இத் தேர்வுகள் ஜூலை 20,21 ஆகிய தேதிகளில் நடக்கின்றன.  ஜூலை 20-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.30 மணிவரை எம்இ, எம்டெக், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை விஸ்வேஷ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் வழங்கும் பட்டப்படிப்புகளுக்கும்,  ஜூலை 21-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை எம்சிஏ பட்டப்படிப்புக்கும்,  பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை எம்பிஏ பட்டப்படிப்புக்கும் தலா 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.  இந்த தேர்வுகளுக்கான நுழைவுச்சீட்டுகளை ஜூன் 14-ஆம் தேதி முதல் இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.  மேலும் விவரங்களுக்கு   இணையதளம் அல்லது 080-23564583, 23361786 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம் என்று அதில்
கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com