நாட்டுப்புறக்கலை பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

நாட்டுப்புறக்கலை பயிற்சி பெற ஆர்வமுள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நாட்டுப்புறக்கலை பயிற்சி பெற ஆர்வமுள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கர்நாடக யக்ஷகானா தெருக்கூத்து அகாதெமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
கர்நாடக யக்ஷகானா தெருக்கூத்து அகாதெமி சார்பில் 2019-20-ஆம் ஆண்டுக்கான நாட்டுப்புறக்கலை பயிற்சி முகாமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சிமுகாமில் தெங்குதிட்டு, படகுதிட்டு போன்ற யக்ஷகானா, மூடலபாயா யக்ஷகானா, தொட்டாடா, பயலாட்டா போன்ற தெருக்கூத்து, சன்னாட்டா, ஸ்ரீகிருஷ்ணபாரிஜாதா, தொகலுகொம்பேயாட்டா, சூத்ரதகொம்பேயாட்டா, கட்டதகொரே உள்ளிட்ட நாட்டுப்புறக்கலைகளை கற்றுத்தரும் வகையில் பயிற்சி முகாம் அமைந்திருக்கும். 
இந்த பயிற்சி முகாமில் 12 வயதுக்கு மேற்பட்டோர் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது. இந்த பயிற்சிமுகாமில் பங்கேற்று பயிற்சி அளிக்கவும், பயிற்சி பெறவும் ஆர்வமுள்ள மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தன்விவரக் குறிப்புகளை பதிவாளர், கர்நாடக யக்ஷகானா தெருக்கூத்து அகாதெமி, கன்னட மாளிகை, 2-ஆவது மாடி, ஜே.சி.சாலை, பெங்களூரு-2 என்ற முகவரிக்கு ஜூலை 15-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 080-22113146 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com