பெங்களூரில் ஜூன் 29-இல் வேலைவாய்ப்பு முகாம்

பெங்களூரில் ஜூன் 29-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. 

பெங்களூரில் ஜூன் 29-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. 
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கீழ் இயங்கும் தொழில்கல்வி மறுவாழ்வு மையம் சார்பில் பெங்களூரு கே.ஜி.சாலையில் உள்ள துணை மணடல் வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு துறைகளைச் சார்ந்த 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. 
வேலைவாய்பு முகாமில் இளநிலை, முதுநிலைப் பட்டதாரிகள், பட்டயம் படித்தோர், பொறியியல் பட்டதாரிகள் கலந்துகொள்ளலாம். புதியவர்கள் முதல் ஓராண்டு வேலை அனுபவம் கொண்டவர்கள் பங்கேற்கலாம். வேலைதேடிவருவோர் தன்விவரக்குறிப்பு விவரங்கள் அடங்கிய ஆவணங்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2, அசல் மற்றும் நகல் கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்ற அடையாள அட்டைகளின் நகல்களை கொண்டுவர வேண்டும்.
 மேலும் விவரங்களுக்கு 080-22374582 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com