யுனானி மருத்துவத்தை ஊக்குவிக்க நடவடிக்கை: அமைச்சர் சிவானந்த பாட்டீல்

யுனானி மருத்துவத்தை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சிவானந்த பாட்டீல் தெரிவித்தார்.

யுனானி மருத்துவத்தை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சிவானந்த பாட்டீல் தெரிவித்தார்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஹாம்தார்டு வெல்நஸ் மையத் தொடக்க விழாவில் அவர் பேசியது: மாநில அளவில் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. பெரும்பாலான நோயாளிகள் அலோபதி சிகிச்சை முறைகளைப் பின்பற்றி வருகின்றனர். அலோபதி மருந்துகளால் பல நேரங்களில் நோய்கள் குணமானாலும், சில நேரங்களில் எதிர்விளைவுகளை ஏற்படுத்துகின்றன. 
எனவே மாநில அளவில் மட்டுமின்றி, தேசிய அளவில் நமது முன்னோர்கள் பயன்படுத்திய ஆயுர்வேதம், சித்தா, யுனானி மருத்துவ முறைகளைப் பின்பற்ற வேண்டும். பக்கவிளைவுகள் இல்லாத யுனானி மருத்துவத்தை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் யுனானி மருத்துவ முறையை விரிவுபடுத்தும் ஹாம்தார்டு வெல்நஸ் குழுத்துடன், மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு, மாநில அளவில் யுனானி மருத்துவ சேவையை பரவலாக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.
நிகழ்ச்சியில் பிற்படுப்பட்டோர் நலத் துறை முதன்மைச் செயலாளர் முகமது மோஷின், ஹாம்தார்டு வெல்நஸ் தலைமை அதிகாரி அகமத், மன்சூர்அலி உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com