பெங்களூரில் நாளை தமிழ் அமைப்புகள் கூட்டம்

பெங்களூரில் மார்ச் 3-ஆம் தேதி அனைத்து தமிழ் அமைப்புகளின் கூட்டத்துக்கு பெங்களூரு தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

பெங்களூரில் மார்ச் 3-ஆம் தேதி அனைத்து தமிழ் அமைப்புகளின் கூட்டத்துக்கு பெங்களூரு தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் தி.கோ. தாமோதரன், செயலாளர் இராம சுப்பிமணியன் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரு விவேக் நகரில் உள்ள  குழந்தை ஏசு தேவாலயத்தில் அண்மையில் புகுந்த சில கன்னட அமைப்பினர், "தமிழில் வழிபாடு நடத்தக் கூடாது; கன்னடத்தில்தான் நடைபெற வேண்டும்.கன்னடத்தைத் தவிர எந்த பெயர் பலகையும் இருக்கக் கூடாது. குறிப்பாக தமிழ் பெயர் இருக்கக் கூடாது' என  கடிதம் அளித்திருந்தது குறித்து பிப்.28-ஆம் தேதி நடைபெற்ற பெங்களூரு தமிழ்ச் சங்க செயற்குழுவில் விவாதிக்கப்பட்டது.
இதுதொடர்பாக விவாதிக்க மார்ச் 3-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு பெங்களூர் தமிழ்ச் சங்க வளாகத்தில் அனைத்து தமிழ் அமைப்புகளின் கூட்டம் நடத்த முடிவுசெய்யப்பட்டது. எனவே, இந்த கூட்டத்தில் அனைத்து தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com