பசவனகுடி காவல் நிலையத்தில் வாகனங்கள் ஏலம்
By DIN | Published On : 15th May 2019 08:12 AM | Last Updated : 15th May 2019 08:12 AM | அ+அ அ- |

பசவனகுடி போக்குவரத்து காவல் நிலையத்தில் மே 20-ஆம் தேதி இரு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.
இதுகுறித்து பெங்களூரு மாநகரக் காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு பசவனகுடி போக்குவரத்து காவல் நிலையத்தில் மே 20-ஆம் தேதி காலை 11 மணி அளவில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோ, 36 இரு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் வாகன ஏலத்தில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 080 22942668 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.