"பயங்கரவாதத்தை ஒடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்'
By DIN | Published On : 16th May 2019 09:12 AM | Last Updated : 16th May 2019 09:12 AM | அ+அ அ- |

தேசிய அளவில் பயங்கரவாதத்தை ஒடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு தலைவரும், செயலாளருமான எஸ்.எஸ்.பிரகாசம் தெரிவித்தார்.
பெங்களூரு குயின்ஸ்சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் புதன்கிழமை ராஜீவ் ஜோதி யாத்திரை தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியது:
நாட்டின் சிறந்த பிரதமர்களில் ஒருவராக விளங்கிய ராஜீவ் காந்தி, பயங்கரவாத்துக்கு பலியானார். அவரின் நினைவாகவும், பயங்கரவாதத்தை ஒடுக்கவும், அஞ்சலி செலுத்தவும் கடந்த 28 ஆண்டுகளாக ராஜீவ்ஜோதியை தமிழ்நாட்டில் அவர் மறைந்த ஸ்ரீபெரும்புதூருக்கு யாத்திரையாக கொண்டு செல்வதனை வழக்கமாக கொண்டுள்ளேன்.
ராஜீவ்ஜோதியின் நோக்கமே பயங்கரவாதத்தை முழுமையாக ஒடுக்க வேண்டும் என்பதே. எந்த மதத்தினர் ஆனாலும், பயங்கரவாத்துக்கு ஆதரவு தருவதை ஏற்க முடியாது. மே 21-ஆம் தேதியன்று ஸ்ரீபெரும்புதூரில் யாத்திரை நிறைவு பெற்று, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படும் என்றார்.