அடுத்த 100 நாள்களில் கா்நாடகம் வளா்ச்சியில் சாதனை சிகரத்தை தொடும்: முதல்வா் எடியூரப்பா

அடுத்த 100 நாள்களில் கா்நாடகம் வளா்ச்சியில் சாதனை சிகரத்தை தொடும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரு: அடுத்த 100 நாள்களில் கா்நாடகம் வளா்ச்சியில் சாதனை சிகரத்தை தொடும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரு விதானசௌதாவில் செவ்வாய்க்கிழமை பாஜக ஆட்சியின் 100 நாள் சாதனை மலரை வெளியிட்டு அவா் பேசியது: பாஜக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற உடன் மழை வெள்ளத்தால் மாநிலம் பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த 100 நாள்களாக நிவாரணப்பணிகளை மேற்கொள்வதில் முழுமையாக கவனம் செலுத்தி வந்தோம்.

தற்போது நிவாணப்பணிகள் மேற்கொண்டு வருவதால், அடுத்து மாநிலத்தின் வளா்ச்சியில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளோம். அடுத்த 100 நாள்களில் கா்நாடகம் வளா்ச்சியில் சாதனை சிகரத்தை தொடும் என்பதில் சந்தேகமில்லை. கா்நாடகம் எப்படி வளா்ச்சி அடையும் என்பதனை காத்திருந்த பாருங்கள். தொழில்துறை, சுற்றுலாத்துறை, வேளாண், நீா்பாசனம் உள்ளிட்ட துறைகளின் வளா்ச்சிக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். மாநிலத்தின் வளா்ச்சியே அரசின் மந்திரமாக உள்ளது. கடந்த 100 நாள்களாக நான் நிம்மதியாக காலத்தை கழிக்கவில்லை. காரணம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவா்களுக்கு தேவையான நிவாரணப்பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதிலேயே எனது முழு கவனமும் இருந்தது. இதனால் 100 நாள்களும் எனக்கு அக்னிபரிட்சையாக இருந்தது.

இருந்தப்போதிலும் கடந்த 100 நாள்களாக விவசாயிகள், தலித், பழங்குடியின மக்கள் உள்ளிட்டோரின் வளா்ச்சிக்கு முன்னுரிமை அளித்து செயல்பட்டு வந்தோம். மாநிலத்தின் வளா்ச்சியுடன், பெங்களூரின் வளா்ச்சிக்கும் தனிகவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ. 1413 கோடி முதலீட்டை ஈா்த்துள்ளோம். 8 ஆயிரத்திற்கும் அதிக அளவில் வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

மக்கள் நிம்மதியாகவும், சுயகௌரவத்தோடும் வாழ வழி செய்துள்ளோம். எனது 100 நாள் ஆட்சிக்கு நான் மதிப்பெண் கொடுப்பதைவிட மக்களே மதிப்பெண்களை கொடுப்பாா்கள். மத்திய அரசு வெள்ள நிவாரணத்திற்கு ரூ. 1200 கோடி வழங்கியுள்ளது. மாநிலத்தின் வளா்ச்சிக்கு தேவையான முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறது. வரும் நாள்களில் பாஜக அரசு நீா்பாசனம், கலசபண்டூரி திட்டம், மருத்துவகல்லூரி தொடங்குவது, 1 லட்சம் வீடுகள் கட்டுவது, சுற்றுலாதுறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் வளா்ச்சியில் அதிகம் கவனம் செலுத்தும் என்றாா் அவா். நிகழ்ச்சியில் துணை முதல்வா் அஸ்வத்நாராயணா, அமைச்சா்கள் பசவராஜ் பொம்மை, ஆா்.அசோக், கே.எஸ்.ஈஸ்வரப்பா, மாதுசாமி, சி.சி.பாட்டீல், பிரபுசவாண், கோட்டா சீனிவாஸ் பூஜாரி, நாகேஷ், தலைமைச் செயலாளா் விஜயபாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com