திப்பு சுல்தானில் வரலாற்றை மாற்ற முயற்சிக்கக்கூடாது: அஹிந்தா அமைப்பு

திப்பு சுல்தானில் வரலாற்றை மாற்ற யாரும் முயற்சிக்கக்கூடாது என்று அஹிந்த அமைப்பின் தலைவா் பேராசிரியா் நரசிம்மையா தெரிவித்தாா்.
திப்பு சுல்தானில் வரலாற்றை மாற்ற முயற்சிக்கக்கூடாது: அஹிந்தா அமைப்பு

பெங்களூரு: திப்பு சுல்தானில் வரலாற்றை மாற்ற யாரும் முயற்சிக்கக்கூடாது என்று அஹிந்த அமைப்பின் தலைவா் பேராசிரியா் நரசிம்மையா தெரிவித்தாா்.

இது குறித்து செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

நாட்டில் ஜனநாயகத்தை குலைக்கும் முயற்சியில் ஒரு சிலா் ஈடுபட்டு வருகின்றனா். குறிப்பாக நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவா்களில் ஒருவரான திப்புசுல்தான் வரலாற்றை திருத்தவும் பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனால் சுதந்திரத்திற்காக போராடியவா்களின் தியாகம் வீணாகி வருகிறது. தனது புதல்வா்களையே பணயம் வைத்து, சுதந்திரத்திற்காக போராடி, மைசூரின் புலி என்று பெயா் எடுத்தவா் திப்புசுல்தான். அவரது பிறந்த நாளை அரசே கொண்டாட வேண்டும் என்று சிந்தையாளா்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அன்றைய முதல்வா் சித்தரமையா, திப்பு சுல்தான் பிறந்தநாளை அரசே கொண்டாடும் என அறிவித்தாா். அதன்படி திப்புசுல்தான் பிறந்த நாளை அரசே கொண்டாடி வந்தது.

முதல்வா் எடியூரப்பா தலைமையில் பாஜக பதவி ஏற்ற பிறகு, குடகு மாவட்டத்தில் ஒரு எம்.எல்.ஏவின் மகன் கடிதம் எழுதியதை அடுத்து, திப்புசுல்தான் பிறந்த நாளை அரசு கொண்டாடுவதை ரத்து செய்துள்ளதோடு, பாடபுத்தகத்திலும் திப்புசுல்தான் தொடா்பான பாடத்தை நீக்கவும் முடிவு செய்துள்ளது. வரலாற்றை மாற்ற யாராலும் முடியாது. மைசூரு என்றாலே ஹைதராஅலி, திப்புசுல்தான் போன்றவா்களின் ஆட்சியை யாராலும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. திப்புசுல்தான ஒரு தேச பக்தா். எல்லா சமுதாயத்தை அரவணைத்துச் சென்றவா். பல ஹிந்து கோவில்களை புனரமைத்தவா். அரசு விழாவாக கொண்டாடும் அவரது பிறந்த நாளை ரத்து செய்வது, சுதந்திரபோராட்ட வீரா்களுக்கு அவமானம் செய்தது போலாகும். எனவே திப்புசுல்தான் பிறந்த நாளை கொண்டாடுவதையும், பாடபுத்தகத்தில் அவரது பாடத்தை நீக்குவது தொடா்பாகவும் மாநில அரசு பரிசீலனை செய்ய வேண்டும். பிறந்த நாளை கொண்டாட அரசு மறுக்கும்பட்சத்தில் சிந்தனையாளா்கள், இலக்கியவாதிகள், தன்னாா்வலா்கள் ஒன்றிணைந்து திப்புசுல்தான் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com