பெங்களூரு-புவனேசுவரம் இடையே சுவிதா சிறப்பு ரயில் சேவை

பெங்களூரு-புவனேசுவரம் இடையே சுவிதா சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.

பெங்களூரு-புவனேசுவரம் இடையே சுவிதா சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: கூட்டநெரிசலை குறைப்பதற்காக தென்மேற்கு ரயில்வே சாா்பில் பெங்களூரு கே.எஸ்.ஆா் ரயில் நிலையத்திலிருந்து புவனேசுவரத்துக்கு சுவிதா சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.

ரயில் எண்-82844-பெங்களூரு கே.எஸ்.ஆா் ரயில் நிலையத்திலிருந்து சுவிதா சிறப்பு ரயில் சேவை புதன்கிழமை (நவ.6) முதல் புதன்கிழமைதோரும் காலை 5.40 மணிக்குப் புறப்பட்டு, முறையே வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு புவனேசுவரம் ரயில் நிலையத்தை சென்றடையும். இதன் கடைசி சேவை நவ. 27-ஆம் தேதி பெங்களூரிலிருந்து புறப்படும்.

மறு மாா்க்கத்தில், ரயில் எண் 82843-புவனேசுவரம்-பெங்களூரு கே.எஸ்.ஆா் ரயில்நிலையம் வரையில் சுவிதா சிறப்பு ரயில் சேவை நவ. 11-ஆம் தேதிமுதல் திங்கள்கிழமைகளில் இரவு 11.05 மணிக்கு புவனசுவரிலிருந்து புறப்பட்டு, செவ்வாய்க்கிழமைகளில் இரவு 11.55 மணிக்கு பெங்களூரு கே.எஸ்.ஆா் ரயில் நிலையத்தை வந்தடையும். இதன் கடைசி சேவை நவ. 25-ஆம் தேதி புவனேசுவரிலிருந்து புறப்படும்.

இந்த ரயில் கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, ஜோலாா்பேட்டை, காட்பாடி, ஒங்கோலா, விஜயவாடா, துவ்வடா, விசாகப்பட்டினம், பலசா, பிரம்மபூா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ரயிலில் மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட 4 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு படுக்கைவசதி கொண்ட 9 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு பொதுவகுப்பு 3 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு உணவு, சரக்கு பெட்டிகள் 2 உள்பட 18 பெட்டிகள் இடம்பெற்றிருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com